Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானை வைட்வாஷ் செய்து.. டெஸ்டில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தை பிடித்தது ஆஸ்திரேலியா!

Recommended Video

Aus vs Pak 2nd test: Australia won by an innings and 48 runs, whitewashed pak.

புதுடெல்லி : தன்னுடைய மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தியதன்மூலம் ஆஸ்திரேலியா 120 புள்ளிகள் பெற்று இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 9 நாடுகளின் பங்களிப்போடு நடைபெற்று வருகிறது. மொத்தம் 72 ஆட்டங்கள் நடைபெறவுள்ள இந்த போட்டியின் இறுதி ஆட்டம் 2022ல் நடைபெறவுள்ளது.

இதில் சமீபத்திய வங்கதேச அணியுடனான பகலிரவு போட்டி உள்ளிட்ட தொடர்களின் வெற்றி மூலம் 360 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

 9 நாடுகள் பங்கேற்பு

9 நாடுகள் பங்கேற்பு

ஐசிசி சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 9 நாடுகளின் அணிகள் பங்கேற்போடு நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 72 ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இறுதி ஆட்டம் வரும் 2022ல் நடைபெற உள்ளது.

 ஒரு தொடருக்கு 120 புள்ளிகள்

ஒரு தொடருக்கு 120 புள்ளிகள்

உலக அளவில் 9 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு தொடரின் வெற்றிக்கும் வெற்றி பெற்ற அணிக்கு 120 புள்ளிகள் கிடைக்கும். இதன் அடிப்படையில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் தலா 60 புள்ளிகள் கிடைக்கும்.

 ஆஸ்திரேலியா இரண்டாவது இடம்

ஆஸ்திரேலியா இரண்டாவது இடம்

இதில் 360 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதையடுத்து 120 புள்ளிகளை கூடுதலாக பெற்று ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

 இலங்கைக்கு எதிரான தொடரை எதிர்பார்ப்பு

இலங்கைக்கு எதிரான தொடரை எதிர்பார்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் தொடரில் ஒரு போட்டியிலும் வெற்றிபெறாத பாகிஸ்தான் அணி, தன்னுடைய நாட்டில் இலங்கையை எதிர்த்து களமிறங்கவுள்ள 2 போட்டிகள் தொடரில் வெற்றி பெறுவதன்மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நுழைய முடியும்.

Story first published: Monday, December 2, 2019, 20:23 [IST]
Other articles published on Dec 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+