Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC WTC Points table - இந்தியாவை காப்பாற்றிய வெஸ்ட் இண்டீஸ்- தோல்வியால் ஆஸிக்கு என்ன ஆனது

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலிய அணியை வெஸ்ட் இண்டீஸ் விரட்டியதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பல்வேறு அணிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே மோதும்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இம்முறை தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் காலங்களில் சவாலான தொடர்கள் பல இருக்கிறது.

ICC World test championship points table - australia lose vs west indies gives advantage to other teams

இதனால் மற்ற அணிகள் தோற்றால் மட்டுமே அது இந்தியாவுக்கு சாதகமாக முடியும். இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் இடம் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் புள்ளி சதவீதம் குறைந்து இருக்கிறது.

தற்போது 55 புள்ளி சதவீதத்துடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா 54.16 என்ற அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் நாம் முதலிடத்திற்கு முன்னேறி செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதனால் ஆஸ்திரேலியாவின் தோல்வி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் மற்ற அணிகளுக்குமே பெரிய பிளஸ் பாயிண்டாக மாறியிருக்கிறது. 50 சதவீத புள்ளி விகிதத்துடன் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து வங்கதேசம் முறையே 3, 4 மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் 36.33 சதவீதத்துடன் ஆறாவது இடத்திலும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 33.3% ஏழாவது இடத்திலும் இங்கிலாந்து அணி 15 சதவீதத்துடன் எட்டாவது இடத்திலும் இலங்கை ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவினால் இந்தியாவின் இடம் சரிய வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Sunday, January 28, 2024, 13:45 [IST]
Other articles published on Jan 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+