ICC WTC Points table -ஒரே வெற்றியால் இந்தியா கிடுகிடுவென உயர்வு..புள்ளி பட்டியலில் இங்கிலாந்து சரிவு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்த வெற்றியின் பிறகு இந்தியா கிடு கிடுவென உயர்ந்து இருக்கிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது.

ஆனால் முதல் டெஸ்டில் தோல்வியை தழுவியதால் புள்ளிகள் சரிந்து ஐந்தாவது இடத்திற்கு இந்தியா சென்றது. இதனை அடுத்து மீண்டும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது மூன்று இடங்கள் முன்னேறி இந்திய அணி மீண்டும் தங்களது பழைய இரண்டாவது இடத்திற்கே வந்து அடைந்துள்ளது.
முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி 55 புள்ளி சதவீதத்துடன் இருக்கிறது. இந்திய அணி 52.7. சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் 50% புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் வங்கதேசமும் அதே 50 ப சதவீத புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் பாகிஸ்தான் 36.6 புள்ளி சதவீதத்துடன் ஆறாவது இடத்திலும் இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் 33.33% ஏழாவது இடத்திலும் இங்கிலாந்து அணி 25. சதவீதத்துடன் எட்டாம் இடத்திலும் இலங்கை பூஜ்ஜியம் புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.
எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அது இரண்டாவது இடத்திற்கு செல்லும்.
இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு சரிய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது தான். இதனால் எஞ்சிய மூன்று போட்டிகள் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்தை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி மட்டும்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications