Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 அணிகள்... ஏப்ரல் 6 வரை.. இன்று முதல்ஐசிசி 20-20 உலகக் கோப்பைத் திருவிழா!

டாக்கா: வங்கதேசத்தில் இன்று ஐசிசியின் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்குகிறது.

இது 5வது உலகக் கோப்பைப் போட்டியாகும். இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில், இந்தியா முதலாவது கோப்பையைத் தட்டிச் சென்றது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் சாம்பியானாகியுள்ளன.

முதல் முறை டோணி தலைமையில்தான் இந்திய அணி கோப்பையை வென்றது. தற்போது மீண்டும் டோணி தலைமையில் இந்திய அணியில் கோப்பையை வெல்லும் கனவுடன் வங்கதேசம் போய் இறங்கியுள்ளது இந்தியா.

அதிக போட்டிகளில் பாகிஸ்தான்

அதிக போட்டிகளில் பாகிஸ்தான்

டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக அளவிலான போட்டிகளை விளையாடிய அணி பாகிஸ்தான்தான். அதாவது 26 போட்டிகளில் அது ஆடியுள்ளது. இலங்கை 25 போட்டிகளிலும் விளையாடியுள்ளது.

அதிக வெற்றிகளைக் குவித்தது பாகிஸ்தான், இலங்கைதான்

அதிக வெற்றிகளைக் குவித்தது பாகிஸ்தான், இலங்கைதான்

போட்டித் தொடரில் அதிக அளவிலான வெற்றிகளைக் குவித்த அணிகளும் பாகிஸ்தான், இலங்கைதான்., அதாவது தலா 16 வெற்றிகளை இவை ஈட்டியுள்ளன.

அதிக தோல்விகள் இங்கிலாந்துக்கு

அதிக தோல்விகள் இங்கிலாந்துக்கு

இங்கிலாந்து அணிதான் அதிக தோல்விகளைச் சந்தித்த அணியாகும். அதாவது 11 தோல்விகளை அது சந்தித்துள்ளது. வங்கதேசமும், நியூசிலாந்தும் தலா 10- தோல்விகளைச் சந்தித்துள்ளன.

200க்கு மேல் 7 முறை

200க்கு மேல் 7 முறை

நான்கு போட்டித் தொடர்களிலும் மொத்தம் 7 முறை 200க்கு மேற்பட்ட ரன்களை அணிகள் எடுத்துள்ளன. அதில் அதிகபட்சமாக இலங்கை அணி கென்யாவுக்கு எதிராக 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்களைக் குவித்து சாதனையாளராக உள்ளது.

100 ரன்களுக்குள்ளாக 12 முறை

100 ரன்களுக்குள்ளாக 12 முறை

அதேபோல 12 முறை ஒரு அணியானது 100 ரன்களுக்குள்ளாக ஆல் அவுட் ஆகியுள்ளன. அதில் அயர்லாந்து அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின்போது 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே சாதனையாகும்.

அதிக ரன்கள் ஜெயவர்த்தனே வசம்

அதிக ரன்கள் ஜெயவர்த்தனே வசம்

அதிக அளவில் ரன்களைக் குவித்த வீரர் இலங்கையின் ஜெயவர்த்தனேதான். இவர் மொத்தம் 858 ரன்களைக் குவித்துள்ளார்.

சிக்ஸர் மன்னன் கெய்ல்

சிக்ஸர் மன்னன் கெய்ல்

மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல்தான் அதிக அளவிலான சிக்ஸர்களை விளாசிய வீரர். அதாவது 43 சிக்ஸர்களை இவர் விளாசியுள்ளார்.

நான்கு சதங்கள்

நான்கு சதங்கள்

உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரில் இதுவரை நான்கு சதங்கள் போடப்பட்டுள்ளன. கெய்ல் 117, சுரேஷ் ரெய்னா 101, ஜெயவர்த்தனே 100, பிரன்டன் மெக்கல்லம் 123 ரன்களை எடுத்துள்ளனர்.

5 முறை 90களுக்கு மேல்

5 முறை 90களுக்கு மேல்

ஐந்து முறை ஒரு வீரர் 90 ரன்களுக்கு மேல் எடுத்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் இங்கிலாந்தின் லைக் ரைட் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிக ஆஃப் அடித்தது கெய்ல்தான்

அதிக ஆஃப் அடித்தது கெய்ல்தான்

அதிக அளவிலான அரைசதங்கள் போட்ட சாதனையும் கெய்ல் வசமே உள்ளது. அவர் 7 அரை சதங்கள் போட்டுள்ளார். அவருக்கு அடுத்து 6 அரை சதங்களுடன் ஜெயவர்த்தனே இருக்கிறார்.

ஏப்ரல் 6ம் தேதி வரை

ஏப்ரல் 6ம் தேதி வரை

இன்று தொடங்கும் உலகக் கோப்பைப் போட்டி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

16 அணிகள்

16 அணிகள்

இந்த முறை மொத்தம் 16 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. இதில் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள 8 அணிகள் மட்டும் நேரடியாக பங்கேற்கின்றன. மற்ற 8 அணிகள் தகுதிச் சுற்றில் முதலில் ஆடும்.

ஏ .. பி...

ஏ .. பி...

தகுதிச் சுற்றில் ஆடும் 8 அணிகளும் ஏ மற்றும் பி பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில், ஏ பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் ஆகியவையும், பி பிரிவில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேடஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்று உள்ளன.

சூப்பர் 10

சூப்பர் 10

இந்த இரண்டு பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 எனப்படும் முதன்மைச் சுற்றுக்குள் பிரவே்சிக்கும். அங்கு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள 8 அணிகளுடன் இவர்கள் பலப்பரீட்சையில் ஈடுபடுவர்.

இன்று 2 போட்டிகள்

இன்று 2 போட்டிகள்

இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் வங்கதேசமும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. 2வது போட்டியில், நேபாளமும், ஹாங்காங்கும் மோதவுள்ளன.

Story first published: Sunday, March 16, 2014, 14:39 [IST]
Other articles published on Mar 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+