Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின்தான் பெஸ்ட்...!

டாக்கா: டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின்தான். இதுவரை நடந்த தொடர்களில் அஸ்வின்தான் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

நேற்று ஆஸ்திரேலியாவுடன் நடந்த போட்டியில், யுவராஜ் சிங் பேட்டிங்கில் ஜொலித்தார் என்றால், ஆஸ்திரேலியாவை தனது பந்து வீச்சில் முறித்துப் போட்டவர் அஸ்வின்தான்.

அஸ்வின் நேற்று 4 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்களைச் சாய்த்தார். நேற்றும் அவரே ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

அஸ்வின் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற இந்திய வீரராகவும் உருவெடுத்துள்ளார்.

4வது ஓவரில் அறிமுகமாகி

4வது ஓவரில் அறிமுகமாகி

நேற்றைய போட்டியில் அஸ்வின் நான்காவது ஓவரில் அறிமுகமானார். அதன் பின்னர் அடுத்தடுத்து ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், கிளன் மேக்ஸ்வெல் கடைசியாக ஜேம்ஸ் முயிர்ஹெட் ஆகியோரை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை நிலைகுலைய செய்தார்.

2வது முறையாக ஆட்ட நாயகன்

2வது முறையாக ஆட்ட நாயகன்

நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து 2வது முறையாக அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.

கேரியர் பெஸ்ட்

கேரியர் பெஸ்ட்

டுவென்டி 20 போட்டியில் அஸ்வினின் சிறந்த பந்து வீச்சு இதுதான். இதற்கு முன்பு 15 ரன்களுக்கு 2 விக்கெட் என்பதே அவரது சிறப்பாக இருந்தது. இதை நேற்று 11 ரன்களுக்கு 4 விக்கெட் என்பதன் மூலம் முந்தினார் அஸ்வின்.

சிறந்த இந்தியப் பந்து வீச்சு

சிறந்த இந்தியப் பந்து வீச்சு

மேலும், இதுவரை ஹர்பஜன் சிங் இங்கிலாந்துக்கு எதிராக 2012ம் ஆண்டு 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த இந்தியப் பந்து வீச்சாக இருந்தது. இதை அஸ்வின் நேற்று முறியடித்தார்.

ஆஸி.க்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்திய...

ஆஸி.க்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்திய...

உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் அஸ்வின்தான்.

Story first published: Monday, March 31, 2014, 17:27 [IST]
Other articles published on Mar 31, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+