Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை யாருமே யோசிக்கலையே.. அஸ்வின் குறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் போட்ட ட்வீட்.. சிந்திக்கும் ரசிகர்கள்

சென்னை: வங்கதேச டெஸ்ட் தொடரில் அஸ்வின் ஆட்டம் குறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் போட்ட ட்வீட் கிரிக்கெட் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து விளையாடிய வங்கதேச அணி 150 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்திய அணியின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒரு முக்கிய காரணம் எனக்கூறலாம். 300 ரன்களையாவது தாண்டுமா என அனைவரும் நினைத்த சூழலில் 405 ரன்கள் வரை கொண்டு சென்றவர் அவர் தான். மொத்தமாக 113 ரன்களை சந்தித்த அவர் 58 ரன்களை அடித்தார். இவரும் குல்தீப் யாதவும் அமைத்த 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் இந்தியாவை காப்பாற்றியது.

ஐஸ்லாந்து கிரிக்கெட் ட்வீட்

ஐஸ்லாந்து கிரிக்கெட் ட்வீட்

இந்நிலையில் இந்த ஸ்கோரை வைத்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் போட்டுள்ள ட்வீட் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர் என எடுத்துக்கொண்டால் அஸ்வின் தான் சரியாக இருப்பார். ஏனென்றால் அவர் நியூசிலாந்து ஜாம்பவான் ஹட்லீயை விட சிறந்த பேட்டிங் சராசரியையும் வைத்துள்ளார், ஷேன் வார்னேவை விட நல்ல எகானமியையும் வைத்துள்ளார்.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹாட்லீ டெஸ்ட் கிரிக்கெட்டில் 27.2 ரன்களை சராசரியாக வைத்துள்ளார். அஸ்வினின் தற்போதைய சராசரி 27.12 ரன்கள் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்லீ அடித்த ஸ்கோரை முந்த அஸ்வினுக்கு இன்னும் 136 ரன்கள் மட்டுமே தேவை ஆகும். இதே போல டெஸ்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே பவுலிங் சராசரியாக 25.40 வைத்திருந்தார். ஆனால் அஸ்வின் 24.20 ரன்களை மட்டுமே வைத்திருக்கிறார்.

மற்றொரு ரெக்கார்ட்

மற்றொரு ரெக்கார்ட்

ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,989 ரன்களை அடித்துள்ளார், 442 விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்தும், 400 விக்கெட்களுக்கு மேலும் கைப்பற்றிய இந்திய வீரர் கபில் தேவ் மட்டுமே ஆகும். அஸ்வின் இன்னும் 11 ரன்களை அடித்தால் 2வது வீரராக இதில் இடம்பெறுவார்.

Story first published: Friday, December 16, 2022, 14:41 [IST]
Other articles published on Dec 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+