“வெறும் ஒரே மேட்ச்சில்..”.. வங்கதேச வெற்றியை வைத்து இங்கிலாந்தை கலாய்த்த ஐஸ்லாந்து கிரிக்கெட்
லண்டன்: ஆஸ்திரேலிய மண்ணில் வங்கதேச கிரிக்கெட் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்துள்ளது. இந்த சுவாரஸ்யமான பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஆஸ்திரேலிய நகரமான டார்வினில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் புதிய சரித்திரம் படைத்தது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பின்னர் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஒரு சுவாரஸ்யமான உண்மை. ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 15 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி எத்தனை டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளதோ, அதே எண்ணிக்கையிலான வெற்றியை வங்கதேச அணி தற்போது தனது ஒரே வெற்றியில் சமன் செய்துள்ளது" என கிண்டலாக பதிவிட்டுள்ளது.

கடந்த 2006 முதல் 2026 வரையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி சுமார் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே இங்கிலாந்து வென்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தான் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. அதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அங்கு வென்றதே இல்லை.
ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடிய வங்கதேச அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்தின் 15 ஆண்டு கால வெற்றி எண்ணிக்கையை மிக எளிதாக சமன் செய்துள்ளது. மேலும், இந்த 15 ஆண்டு காலத்துக்கு முன் வங்கதேசம் ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தது.
வங்கதேச அணியின் இந்த அசாத்திய வெற்றியை கிரிக்கெட் உலகம் கொண்டாடி வரும் வேளையில், ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்தின் மோசமான ஆஸ்திரேலிய சாதனையை சுட்டிக்காட்டி கலாய்த்துள்ளது. அதேசமயம் இந்த அதிர்ச்சி தோல்விக்குப் பிறகும் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 77.77 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
