Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனிருத்தா அதிரடி ஆட்டம்... காஞ்சியை வீழ்த்தியது காரைக்குடி!

திண்டுக்கல்:டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐடிரீம்ஸ் காரைக்குடி காளை அணி அபாரமாக வென்றது. காரைக்குடியின் அனிருத்தா ஸ்ரீகாந்த் அதிரடியாக விளையாடி 93 ரன்கள் எடுத்தார்.

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் திண்டுக்கல்லில் நேற்று நடந்த ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை அணிகள் மோதின.

idream karaikuddi kaalai wins over vb kanchi veerans in the tnpl

இதில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. முதல் ஓவரிலேயே சித்தார்த் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பாபா அபராஜித் 4, லோகேஸ்வர் 3, முகிஷேஸ் 7 என தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.
ஒரு பக்கம் விஷால் வைத்யா 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்கள் சரிய, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களுக்கு காஞ்சி அணி ஆட்டமிழந்தது.

காரைக்குடியின் லக்ஷ்மண், மோகன் பிரசாத் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அடுத்து விளையாடிய காரைக்குடியின் துவக்க ஆட்டக்காரர் வி.ஆதித்யா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அனிருத்தா ஸ்ரீகாந்த் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்தார். 49 பந்துகளில் அவர் 6 பவுண்டரிகள், 7 சிக்சர்களை விளாசினார்.
மான் பாப்னா 24, ஆர். ஸ்ரீனிவாசன் 19 ரன்கள் எடுக்க, 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி அணி வென்றது.

Story first published: Friday, July 20, 2018, 11:37 [IST]
Other articles published on Jul 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+