தப்பைத் திருத்திக்கிட்டா "வெள்ளை"யிலிருந்து தப்பலாம்.. டைரக்டர் ரவி சாஸ்திரி
கான்பெரா: இந்தியப் பந்து வீச்சாளர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு பந்து வீசினால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை 5-0 என்ற கணக்கில் இழப்பதிலிருந்து இந்தியா தப்ப முடியும் என்று இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் இழந்து விட்டது. இன்னும் 2 போட்டிகள் மட்டுமே பாக்கி உள்ளன. இந்த நிலையில் அந்தப் போட்டிகளிலும், அதற்கு அடுத்து வரும் டுவென்டி 20 போட்டிகளிலும் இந்தியாவைத் தோற்கடிப்போம் என்று கிளன் மேக்ஸ்வெல் எகத்தாளமாக கூறியுள்ளார்.
ஆனால் இந்தியப் பந்து வீச்சாளர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டால் இந்த அவலத்திலிருந்து தப்ப முடியும் என்று ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றாக பேட் செய்தும்
முதல் 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவின் பேட்டிங்கை குறை சொல்ல முடியாது. முதல் போட்டியில் 309, 2வது போட்டியில் 308 ரன்களை எடுத்த இந்தியா 3வது போட்டியில் 295 ரன்களை எடுத்தது.

பந்து வீச்சு -பீல்டிங் சொதப்பல்
ஆனால் மூன்று போட்டிகளிலும் இந்தியாவின் பந்து வீச்சு எடுபடவில்லை. பீல்டிங்கும் சரியில்லை. இதனால் 3 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைய நேரிட்டது.

கான்பெராவில் நாளை 4வது போட்டி
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் நாளை நான்காவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ரவிசாஸ்திரி சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.

வெட்கப்படத் தேவையில்லை
3 போட்டிகளிலும் தோல்வி அடைந்ததற்காக அவமானமோ, வெட்கமோ படத் தேவையில்லை. தவறுகளைத் திருத்திக் கொண்டாலே போதுமானது. 5-0 என்ற தோல்வியைத் தவிர்க்க முடியும்.

படிப்பினைதான்
எல்லாமே படிப்பினைதான். கற்றுக் கொள்வதில் வெட்கப்படக் கூடாது. பவுலர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள முயல வேண்டும். ஆஸ்திரேலிய பயணத்தில் இதுபோன்ற சூழல்கள் இயல்பானது.

பவுலர்கள் சிறப்பானவர்கள்
நிச்சயம் நமது பவுலர்கள் சிறப்பானவர்கள். தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள். சரிவர பந்து வீசுவார்கள் என நம்புகிறேன். மேலும் ஆஸ்திரேலியா நன்றாக விளையாடியதும் நமது தோல்விக்கு ஒரு காரணம் என்றார் சாஸ்திரி.


Click it and Unblock the Notifications