அவர் போய்ட்டா கோவிந்தா தான்..!! டீம் இந்தியா எதுக்கும் ஆகாது..! அலர்ட் தந்த சாதனை வீரர்
Recommended Video
மும்பை: பும்ரா விளையாடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரும் இழப்பு என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முக்கிய, நட்சத்திர பந்துவீச்சாளர் யார் என்றால் இப்போதைக்கு பும்ராதான். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்டிலும் 13 விக்கெட்டுகளை அள்ளினார். சாய்த்தார். டெஸ்ட் தொடரை 2க்கு 0 என வெல்ல அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஹர்பஜன், இர்பான் பதான் ஆகியோருடன் பும்ரா இணைந்துள்ளார். பும்ராவின் அசத்தல் பந்துவீச்சை இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், ஜாம்பவான்களும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

பாராட்டுகள்
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதானும் பும்ராவை விழுந்து, விழுந்து பாராட்டி இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது: இந்திய அணியில் மிக முக்கியமான வீரர் ஒருவர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. ஜஸ்பிரித் பும்ரா தான் அவர்.

பெரும் இழப்பு
இந்திய அணியில் பும்ரா விளையாடாவிட்டால், அணிக்கு பெரும் இழப்பு. அந்த அளவுக்கு அணியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக உருமாறி இருக்கிறார் பும்ரா. அவரால் இந்திய அணி ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

சாதனை கடினம்
அவரை இந்திய அணி மிக கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். அவர் மாதிரி, டி 20, ஒருநாள், டெஸ்ட் என 3 வகையான போட்டிகளிலும் சாதிப்பது கடினமான விஷயம்.

இது தொடரும்
பும்ரா டெஸ்ட் போட்டியில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் ரொம்பவே முக்கியமான ஒன்று. அவரின் சாதனை இதோடு நின்று விடாது. இன்னும் அதிக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவார்.

அரிதான விஷயம்
சில வீரர்கள் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு ஹாட்ரிக் விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் உள்ளனர். ஒருமுறை இந்தச் சாதனையை படைத்து விட்டால், அரிதான ஒரு விஷயத்தை செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம் என்றார்.


Click it and Unblock the Notifications