தோனியை டீம்ல வச்சுக்கிட்டாலும் உலக கோப்பையை ஜெயிக்க முடியாது... கழுவி, கழுவி ஊத்திய கம்பீர்
மும்பை: தோனியை சேர்த்தாலும் உலக கோப்பை இந்திய அணியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ள கருத்து, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3-2 என்று இந்திய அணி இழந்தது. அதனால் இந்திய அணியின் உலக கோப்பை போட்டிக்கான தயார் நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன,
உலக கோப்பையை எப்படி எதிர்கொள்வது, அணியில் வீரர்களை நிலையாக வைத்துக் கொள்ளாதது என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.இது தொடர்பாக, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, சஞ்சய் பாங்கர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

கம்பீரின் கருத்து
தற்போது அவர்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், கம்பீரும் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:இந்திய அணியில் உலக கோப்பை போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்று கோலி கூறியிருக்கிறார்.

சிறந்த லெவன் கிடையாது
ஒரேயொரு இடம் பற்றிய கேள்விதான் இருக்கிறது என்று அவர் தெரிவித்து உள்ளார். ஆனால் தற்போதைய இந்திய அணியோ சிறந்த லெவன் கிடையாது, அதுவும் உலக கோப்பைக்கு முற்றிலும் பொருத்தமான அணி இல்லை.

வாய்ப்பு இல்லை
ஐபிஎல்லுக்கு பிறகு உலக கோப்பை தொடர் வருகிறது. எனவே.. அணியில் பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. ஆனால் இந்த அணி நிச்சயம் உலக கோப்பைக்கான சிறந்த அணியாக இருக்க முடியாது என்பது உறுதி.

சேர்த்தாலும் ஒன்றுமில்லை
விராட் கோலி சொல்வது.. இது தான் இந்தியாவின் உலக கோப்பை அணி என்பது போல கூறியிருக்கிறார். தோனியை இந்த அணியில் சேர்த்தாலும் கூட இந்த பிளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றமும் வர போவதில்லை என்று கம்பீர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications