உலக கோப்பையில் தல தோனி விளையாடினா நானும் விளையாடுவேன்.. எப்போ 2023ல்.. யாருப்பா அது..?
கேப்டவுன்:2023ம் ஆண்டு உலக கோப்பையில் தோனி ஆடினால் நானும் அந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்பேன் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்து உள்ளார்.
அனைவரும் எதிர்பார்த்த உலக கோப்பை வந்தேவிட்டது. இன்னும் 12 நாட்கள் தான் இருக்கின்றன. இந்த முறை லீக் சுற்றில் அனைத்து அணிகளுமே மற்ற அணிகளுடன் மோதும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு உலக கோப்பை இந்தியா அல்லது இங்கிலாந்துக்கு தான் பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்துகளை முன் வைத்துள்ளனர். இது ஒரு பக்கமிருக்க லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளதால், உலக கோப்பை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கணிப்பு பொய்த்தது
இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இதுவரை உலக கோப்பை சாம்பியனானது இல்லை. 2015ம் ஆண்டில் உலக கோப்பையை டி வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி வெல்லும் என்று கணிக்கப் பட்டது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று கண்ணீருடன் வெளியேறியது.

ஓய்வு முடிவு
தற்போதைய தென் ஆப்ரிக்க அணியை டுபிளெசிஸ் வழிநடத்தி செல்கிறார். 2015ம் ஆண்டு உலக கோப்பைக்கு பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய டி வில்லியர்ஸ், டுபிளெசிஸ் தலைமையில் ஆடிவந்தார். அவர் ஒரு கேப்டனாக இல்லாவிட்டாலும் ஒரு வீரராக ஆடி 2019 உலக கோப்பையை வென்று கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த ஆண்டு திடீரென ஓய்வு அறிவித்தார்.

பலத்த நம்பிக்கை
அவர் இல்லாதது தென் ஆப்ரிக்க அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ரபாடா, ஸ்டெய்ன், இம்ரான் தாஹிர், லுங்கி இங்கிடி என தலைசிறந்த பவுலர்களை கொண்டுள்ளதால் பலத்த நம்பிக்கையை அந்த அணி கொண்டிருக்கிறது.

தோனி இருந்தால் விளையாடுவேன்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி வில்லியர்ஸ், 2023ம் ஆண்டு உலக கோப்பையில் தோனி விளையாடினால் தாமும் ஆட போவதாக கூறி இருக்கிறார் அவர் மேலும் கூறியதாவது: 2023ம் ஆண்டில் எனக்கு 39 வயதாகி விடும். அந்த உலக கோப்பையில் தோனி ஆடினால் கண்டிப்பாக நானும் ஆடுவேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications