வெற்றிக்கு தேவை என்னவோ 329 ரன்.. அந்த ரன்னை அடிக்கலைன்னாலும் இந்தியா பைனலுக்கு போயிரும்!
சிட்னி: இந்தியா தனது வெற்றிக்கு 329 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தாலும்கூட, 328 ரன்கள் எடுத்தாலும், அந்த அணி பைனலுக்குள் நுழைந்துவிடும். அப்படியொரு நிலைதான் ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, இரண்டாவது அரையிறுதியில், 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா, 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. எனவே இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 329 ரன்களாகும்.

இந்த பரபரப்பான ஆட்டத்தில், ஐசிசியின் ஒரு விதிமுறையை நினைவுபடுத்த வேண்டியது கட்டாயமாகும்.
ஒருவேளை இந்தியா 328 ரன்களை மட்டுமே எடுத்தாலும், போட்டி டை ஆகுமே தவிர, இறுதி போட்டிக்கு, இந்தியா தாராளமாக சென்றுவிடும். ஏனெனில், ஐசிசி விதிமுறைப்படி, ஒரு போட்டி டை ஆனால், லீக் ஆட்டங்களில் எந்த அணி அதிக வெற்றி பெற்றுள்ளதோ, அந்த அணிதான் அடுத்த சுற்றுக்கு செல்லும்.
அப்படிப் பார்த்தால், ஆறு லீக் போட்டிகளிலும் வென்ற இந்தியா, எளிதாக பைனலுக்குள் செல்லும். ஆனால் நியூசிலாந்திடம் தோற்று, வங்கதேசத்துடனான போட்டி கைவிடப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது.


Click it and Unblock the Notifications