Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு இல்லை.. இந்தியாவுக்கு தான் உலக கோப்பை.. ஆதரவு தெரிவித்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்

Recommended Video

WORLD CUP 2019: IND VS NZ | இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த சோயப் அக்தர் - வீடியோ

இஸ்லாமாபாத்: உலக கோப்பையை இந்திய அணி வென்றால் மகிழ்ச்சி என்று பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக் சுற்று முடிந்து நாளை அரையிறுதி போட்டிகள் ஆரம்பமாகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

நாளை மான்செஸ்டரில் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவும், 4ம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்தும் மோதுகின்றன. போட்டியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி, பைனலுக்கு முன்னேறும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

செமிபைனல்

செமிபைனல்

வரும் 11ம் தேதி 2வது அரையிறுதி. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதுகின்றன. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என்று உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பே பல ஜாம்பவான்கள் கணித்து கருத்து தெரிவித்தனர்.

வாய்ப்பு இருக்கிறதா?

வாய்ப்பு இருக்கிறதா?

அதை உண்மையாகி விடுமோ என்ற வகையில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், உலக கோப்பை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியிருக்கும் கருத்து உற்று பார்க்கப்படுகிறது.

பைனலில் இந்தியா

பைனலில் இந்தியா

அவர் மேலும் கூறியதாவது: அரையிறுதி போட்டிக்கான நெருக்கடி உள்ளது. எனவே, பெரும் அழுத்தத்தை நியூசிலாந்தால் சமாளிக்க முடியாது. எனவே இந்தியா சிறப்பாக விளையாடி, பைனலுக்கு செல்வர்.

கோப்பை இந்தியாவுக்கே

கோப்பை இந்தியாவுக்கே

உலக கோப்பையானது துணைக்கண்டத்தில் தான் இருக்க வேண்டும். எனவே இந்தியா கோப்பையை வென்றால் அது மகிழ்ச்சிதான். உலக கோப்பையை இந்திய அணி துணைக் கண்டத்திற்கு கொண்டுவருவார்கள்.

அணியின் ரன்ரேட்

அணியின் ரன்ரேட்

அரையிறுதிக்கான ரேசில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் வெற்றிகள், புள்ளிகள் ஒரேமாதிரி இருந்தன. நியூசிலாந்தைக் காட்டிலும் சிறப்பான கிரிக்கெட்டை பாகிஸ்தான் விளையாடியது. ஆனாலும் அரையிறுதிக்குச் செல்ல முடியவில்லை. நிகர ரன்ரேட் முறை வாய்ப்பை பறித்துவிட்டது என்றார்.

Story first published: Monday, July 8, 2019, 11:45 [IST]
Other articles published on Jul 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+