Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி நடந்தால்?... போங்க பாஸ், போய் புள்ள குட்டியைப் படிக்க வைங்க பாஸ்!

ஹோபர்ட்: இன்று நடைபெறும் உலகக் கோப்பை சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து முதலில் ஆடி 350 ரன்களைக் குவிக்க வேண்டும். பின்னர் ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியாவை 88 ரன்களுக்குள் சுருட்டி வெளியேற்ற வேண்டும். இப்படி நடந்தால் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் காலிறுதியில் மோதும் நிலை ஏற்படுமாம். இப்படி ஒரு காமெடியான செய்தி டிவிட்டரில் பரவி ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் நிலைமை தலைகீழாகத்தான் உள்ளது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஸ்காட்லாந்தை நையப்புடைத்து வருகின்றனர்.

If it happened...!

it அது but பட் ஆனால் what வாட் என்ன?? இது கிரிக்கெட் உலகில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம். இப்படி நடந்தால், அப்படி நடந்தால், இது இப்படி முடிந்தால், அது அப்படி முடிந்தால் என்று ஏகப்பட்ட கேள்விகளைப் போட்டு விவாதிப்பார்கள்.

அந்த வகையில் ஒரு வித்தியாசமான செய்தியை டிவிட்டர் தகவல் ஒன்றில் படிக்க முடிந்தது. அது இதுதான்....

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இது ஏ பிரிவில் 4-வது இடத்தை பிடித்துள்ள வங்கதேசத்துடன் காலிறுதியில் மோதவுள்ளது. இப்போட்டி மெல்போர்னில் வருகிற 19 ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் டிவிட்டரில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது இன்று ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து இடையே நடைபெறும் லீக் போட்டியில் முதலில் பேட் செய்யும் ஸ்காட்லாந்து 350- ரன்களைக் குவிக்க வேண்டுமாம். பிறகு ஆஸ்திரேலியாவை 88 ரன்களுக்குள் சுருட்ட வேண்டுமாம். அப்படி நடந்து ஸ்காட்லாந்து வென்றார் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் 3வது இடத்தையும், ஆஸ்திரேலியா 4வது இடத்தையும் பிடிக்கும். காலிறுதியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மோதும் நிலை வருமாம்.

இப்படியெல்லாமாப்பா பீதியைக் கிளப்புவது....?

Story first published: Saturday, March 14, 2015, 10:23 [IST]
Other articles published on Mar 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+