Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு விளையாடலாம்… இவரு விளையாடலாம்… நான் விளையாடக்கூடாதா? நச்சென்று கேட்ட அந்த வீரர்

டெல்லி: டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் போது, 36 வயதான என்னால் விளையாட முடியும் என்று ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

3 பேருக்கும் ஆயுள்கால தடையை கிரிக்கெட் வாரியம் விதித்தது. ஆனால் கேரள உயர்நீதிமன்றம் அந்த தடையை நீக்கி உத்தரவிட, பிசிசிஐ உச்சநீதிமன்றத்தை நாடியது.

தடையை நீக்கியது

தடையை நீக்கியது

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கியது. அவர் விளையாடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.

ஸ்ரீசாந்த் கருத்து

ஸ்ரீசாந்த் கருத்து

இது குறித்து ஸ்ரீசாந்த் தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்ரீசாந்த் கூறியிருப்பதாவது:

டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்கிறார். அப்படியானால் 36 வயதான என்னால் இன்னும் ஏன் சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாது.

6 ஆண்டுகள்

6 ஆண்டுகள்

எனது வாழ்க்கையில் மிஞ்சி இருப்பது என்னவென்று தெரியாது. என்னுடைய வாழ்க்கை என்று நினைத்த கிரிக்கெட்டை 6 ஆண்டுகளாக விளையாடவில்லை.

எனது விருப்பம்

எனது விருப்பம்

கிரிக்கெட்டில் என்னால் என்ன முடியுமோ அதனை செய்ய விரும்புகிறேன். வயது என்பது ஒவ்வொருவர் மனதை பொறுத்தது.

6 ஆண்டுகள் ஆகிவிட்டன

6 ஆண்டுகள் ஆகிவிட்டன

ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்று மீண்டும் விரும்புகிறேன். கடந்த ஆண்டு அந்த போட்டியில் விளையாட நான் நினைத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. 6 ஆண்டுகளாக முதல் தர போட்டியில் விளையாடவில்லை.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

பெற்றோர், மனைவி, அவரது பெற்றோர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஹர்பஜன்சிங், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட வீரர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

Story first published: Saturday, March 16, 2019, 17:02 [IST]
Other articles published on Mar 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+