Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றிக்கு தேவை என்னவோ 298 ரன்.. அந்த ரன்னை அடிக்கலைன்னாலும் நியூசி. பைனலுக்கு போயிரும்!

ஆக்லாந்து: நியூசிலாந்து வெற்றிக்கு 298 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தாலும்கூட, 297 ரன்கள் எடுத்தாலும், அந்த அணி பைனலுக்குள் நுழைந்துவிடும். அப்படியொரு சோகம் தென் ஆப்பிரிக்காவுக்கு.

முதலில் கட்டை போட்ட தென் ஆப்பிரிக்கா தனது அதிரடி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் 38வது ஓவரில் பெய்த மழையால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

If New Zealand scores 297 runs, it will take them to the MCG in the final

இதையடுத்து 43 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. மாற்றப்பட்ட விதிமுறைப்படி, 43 ஓவர்களில் நியூசிலாந்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து நியூசிலாந்து அதிரடியாக பேட்டிங்கை தொடங்கியது. ஆட்டம் பரபரப்பான நிலையில் சென்ற நிலையில், ஐசிசியின் ஒரு விதிமுறையை நினைவுபடுத்த வேண்டியது கட்டாயமாகும்.

ஒருவேளை நியூசிலாந்து 297 ரன்களை மட்டுமே எடுத்தாலும், போட்டி டை ஆகுமே தவிர, இறுதி போட்டிக்கு, நியூசிலாந்து தாராளமாக சென்றுவிடும். ஏனெனில், ஐசிசி விதிமுறைப்படி, ஒரு போட்டி டை ஆனால், லீக் ஆட்டங்களில் எந்த அணி அதிக வெற்றி பெற்றுள்ளதோ, அந்த அணிதான் அடுத்த சுற்றுக்கு செல்லும். அப்படிப் பார்த்தால், ஆறு லீக் போட்டிகளிலும் வென்ற நியூசிலாந்து எளிதாக பைனலுக்குள் செல்லும். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் லீக் போட்டிகளில் தோல்வியுற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது.

Story first published: Tuesday, March 24, 2015, 14:48 [IST]
Other articles published on Mar 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+