Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND Vs NZ: செமிபைனலில் இந்தியாவின் வெற்றி மழையின் கைகளில்..! பிரார்த்திக்கும் ரசிகர்கள்

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ : SEMI FINAL | அரையிறுதியில் இந்தியாவின் வெற்றி மழையின் கைகளில்.!- வீடியோ

மான்செஸ்டர்: ரிசர்வ் டேவான இன்றும் ஒருவேளை மழையால் ஆட்டம் தடைபட்டு, டக்வொர்த் லூயிஸ் விதி பயன்படுத்தப் பட்டால் அது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் தடைபட்டது. டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்ததால் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் போட்டி விட்ட இடத்தில் இருந்து இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்டிப மீதமுள்ள 3.5 ஓவர்கள் இன்று வீசப்படும். அதன்பின் இந்தியா தமது சேசிங்கை தொடங்கும்.

 மழை வரும்

மழை வரும்

இன்றைய ஆட்டத்திலும் மழை வரவே வாய்ப்பு இருப்பதாக தான் வானிலை மைய அறிவிப்பு இருக்கிறது. வானம் காலையில் இருந்தே மேகமூட்டமாக இருக்கும், காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கினாலும் அந்த நேரத்தில் மழை பெய்ய 47 சதவீதம் வரை வாய்ப்பு உள்ளது.

 மழைக்கு நிச்சய வாய்ப்பு

மழைக்கு நிச்சய வாய்ப்பு

பின்னர், படிப்படியாக அதிகரித்து 51 சதவீதம் வரை உயரும், பின்னர் நண்பகலில் மழை குறையத்தொடங்கும் என்பது தான் வானிலை மையம் தரும் சேதி. அதன் பின் மீண்டும் மாலை 4 மணி முதல் மழை பெய்ய 50 சதவீதம் வரை வாய்ப்பு இருக்கும், லேசான சாரல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஓவர் குறைக்கப்படும்

ஓவர் குறைக்கப்படும்

மழை இல்லை என்றால் இந்தியாவுக்கு 50 ஓவர்கள் கொண்ட முழு போட்டியாக அமையும். ஒருவேளை காலையில் மீண்டும் மழை பெய்தாலோ, அல்லது ஆடு களம் ஈரமாக இருந்தாலோ ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். அது பின்னர் ஓவர் குறைப்புக்கு வழி வகுக்கும். இன்னும் சொல்லப்போனால், 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக கூட மாற்றப்பட சாத்தியங்கள் உண்டு.

 20 ஓவர் கொண்ட போட்டி

20 ஓவர் கொண்ட போட்டி

இன்றைய சூழலில் 20 ஓவர்கள் போட்டியாகவே நடத்தப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதிலும் மழை குறுக்கிட்டாலும் கவலையில்லை இந்தியா இறுதிக்குச் செல்லும். ஏனென்றால், லீக் சுற்றின் முடிவில் அதிக வெற்றிகள், புள்ளிகள் அடிப்படையில் அந்த வாய்ப்பு இந்திய அணி்க்கு கிடைக்கும்.

 டக்வொர்த் லூயிஸ் விதி

டக்வொர்த் லூயிஸ் விதி

ஒருவேளை ஆட்டம் தொடங்கி இடையில் மழைபெய்து தடை ஏற்பட்டால் டக் வொர்த் லூயிஸ் என்ற விதி பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் அது நியூசிலாந்துகுத்தான் சாதகமாக அமைகிறது. ஏனென்றால், 40 ஓவர்களில் நியூசிலாந்து 150 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

 148 ரன்கள் இலக்கு?

148 ரன்கள் இலக்கு?

டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணிக்கு இலக்கு 46 ஓவர்களில் 236 ரன்களாக மாற்றப்படும். ஒருவேளை 20 ஓவர்களாக போட்டி நடத்தப்படும் சூழலாக இருந்தால் 20 ஓவர்களில் 148 ரன்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால், நேற்றைய மழையால் ஆடுகளம் மூடிவைக்கப்பட்டு உள்ளது.

 பந்துகள் பவுன்சராகும்

பந்துகள் பவுன்சராகும்

ஈரப்பதம், காற்றில் நிலவும் குளிர் ஆகியவை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். ஒருவேளை காலையில் மழையின்றி நன்கு வெயில் அடித்தால் மட்டுமே இந்தியாவுக்கு சாதகம். வெயில்அடித்தாலும், குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வரை பவுலர்களுக்கு பிட்ச் சாதகமாக இருக்கும்.

 மழையின் கைகளில் வெற்றி

மழையின் கைகளில் வெற்றி

பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகி, பவுன்சாகும். குறிப்பாக போல்ட், பெர்குசன் பந்துகளை சமாளிப்பது கடினமாகிவிடும். இது தவிர இந்த மைதானத்தில் இதுவரை நடந்த ஆட்டங்கள் அனைத்திலும் முதலில் பேட் செய்த அணியே வென்றுள்ளதால் நியூசிலாந்து அதிகபட்ச நம்பிக்கையில் உள்ளது. ஆக மொத்தத்தில் மழையின் கைகளில் இந்தியாவின் வெற்றி இருக்கிறது எனலாம். அதற்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Story first published: Wednesday, July 10, 2019, 10:48 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+