Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளைய அரையிறுதியில் அது மட்டும் நடந்தால்....? ஆடாமலே பைனலுக்கு போகும் இந்தியா

Recommended Video

World Cup 2019 : இந்திய பைனலுக்கு செல்ல ஒரு வாய்ப்பு?.. அதற்க்கு ஒரு சிக்கல் இருக்கு- வீடியோ

மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியை ஆடாமல் இறுதிப் போட்டிக்கு செல்லும் ஒரு வாய்ப்பை இந்திய அணி பெற்றிருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட 4 அணிகள் செமி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை முதல் செமி பைனல். நியூசிலாந்தை, இந்தியா சந்திக்கிறது.

அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா பைனலுக்கு முன்னேறும், கோப்பையை கைப்பற்றும் என்று கோடான கோடி ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவுக்கு தான் இம்முறை கோப்பை என்று பல முன்னணி வீரர்களும், முன்னாள் ஜாம்பவான்களும் அடித்துச் சொல்லி வருகின்றனர்.

இயற்கையின் ஒத்துழைப்பு

இயற்கையின் ஒத்துழைப்பு

ஆனால், நாளை அரையிறுதி போட்டியை ஆடாமலே, இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது. அதற்கு இயற்கையின் ஒத்துழைப்பு அவசியம். அதாவது மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால் இந்தியா பைனலுக்கு சென்றுவிடும்.

விளையாடிய மழை

விளையாடிய மழை

அது எப்படி என்று கொஞ்சம் பார்ப்போம். இந்த உலக கோப்பையில் வீரர்கள் விளையாடினார்களோ இல்லையோ, மழை பல ஆட்டங்களில் நன்றாக விளையாடி இருக்கிறது. இந்தியாவும் ஒரு போட்டியை இழந்திருக்கிறது. 45 ஆட்டங்களில் 7 போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. 3 போட்டிகள் டக்வொர்த் லீவிஸ் முறையில் முடித்து வைக்கப்பட்டன.

வானிலை மையம் தகவல்

வானிலை மையம் தகவல்

அதே மழை தான் மான்செஸ்டரில் நாளை பெய்ய வாய்ப்பிருப்பதாக பிரிட்டன் வானிலை மையம் அறிவித்திருக்கிறது. நாளை மான்செஸ்டரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் கூறி இருக்கிறது. ஒருவேளை மழை பெய்து, அரையிறுதி ஆட்டம் தடைபட்டு, மற்ற லீக் போட்டிகளை போல ஆட்டம் நிறுத்தப்படாது.

மாற்று நாள் ஏற்பாடு

மாற்று நாள் ஏற்பாடு

ஏன் என்றால், மற்ற ஆட்டங்களை போல அல்லாமல், அரைஇறுதி அல்லது இறுதி போட்டிகள் பாதிக்கப்பட்டால், மீண்டும் விளையாட மாற்று ஏற்பாடாக மற்றொரு நாள் ஒதுக்கப்படும். அதன்படி 9ம் தேதி மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் மறுநாளான 10ம் தேதி போட்டி நடக்கும். ஆனால், அந்த 10ம் தேதியும் வானிலை மேலும் மோசமாக இருக்கும் என்று பிரிட்டன் வானிலை மையம் கணித்துள்ளது.

அன்றும் மழை வரும்

அன்றும் மழை வரும்

மேலும், அன்றைய தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மதிய நேரத்தில் மழை பெய்யும் என்று பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. 10ம் தேதி மழை பெய்து போட்டி நிறுத்தப்பட்டால், வேறு வழியே கிடையாது. எந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதை அறிவித்தாக வேண்டும்.

ஆடாமல் பைனல்

ஆடாமல் பைனல்

இந்த இடத்தில் தான் இந்தியா எடுத்துள்ள புள்ளிகள் கைகொடுக்கும். நியூசி.யை விட இந்தியா 4 புள்ளிகள் அதிகம் பெற்று 15 புள்ளிகளோடு உள்ளது. எனவே, லார்ட்ஸில் நடைபெறும் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா நேரடியாக தகுதி பெறும். இது தான் ஆடாமலேயே பைனலுக்கு செல்லும் வாய்ப்பாகும்.

முடிவுகள் மாறலாம்

முடிவுகள் மாறலாம்

வரும் வியாழக்கிழமை 2வது அரையிறுதி நடைபெறும் எட்ஜ்பாஸ்டனில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளான வெள்ளியன்று மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் போட்டி கைவிடப் பட்டு புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் ஆஸி. பைனலுக்கு செல்லும். இங்கிலாந்தின் கோப்பை கனவு இந்த முறையும் அம்போவாகி விடும். இவை எல்லாம், மழையை முன் வைத்து வரையப்படும் கணக்கீடுகளாகும். போட்டிகள் நடைபெறும் பட்சத்தில் முடிவுகள் மாறலாம்.

Story first published: Monday, July 8, 2019, 14:33 [IST]
Other articles published on Jul 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+