Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால்.. என்ன செய்யனும்னு எங்களுக்கு தெரியும்.. ஓபன் சவால்விட்ட முகமது ஷமி!

அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதி போட்டியில் பந்தில் ஸ்விங் செய்ய முடியவில்லை என்றால், தனது திட்டம் என்ன என்பது குறித்து முகமது ஷமி கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியதற்கு முகமது ஷமி முக்கியமான காரணமாக அமைந்துள்ளார். மும்பை மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா மற்றும் சிராஜ் இருவருக்கும் பெரியளவில் ஸ்விங் ஆகாத நிலையில், முகமது ஷமி மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை இறுதி சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

If the ball is not swinging, i will bowl to stump to stump line and length says Mohammad shami ahead of india vs australia world cup final

உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டங்களில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமி இடம்பெறவில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறிய போது, முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி மிரட்டிய முகமது ஷமி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதி போட்டிக்கு முகமது ஷமி தீவிரமாக தயாராகி வருகிறார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஆடி வரும் முகமது ஷமிக்கு, அகமதாபாத் மைதானத்தின் பிட்சில் எந்த லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்பது குறித்த அனைத்து விவரங்களும் நன்றாகவே தெரியும். அதனால் முகமது ஷமியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கோல்டன் பாலுக்கான ரேஸில் முகமது ஷமி மற்றும் ஆடம் ஜாம்பா இருவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. முகமது ஷமி 23 விக்கெட்டுகளும், ஆடம் ஜாம்பவா 22 விக்கெட்டுகளும் வீழ்த்தி முதல் இரு இடங்களில் உள்ளனர். இந்த நிலையில் முகமது ஷமி அளித்துள்ள பேட்டியில், நான் எப்போதும் சூழலுக்கு ஏற்றபடியே பவுலிங் திட்டங்களை மாற்றி கொள்வேன். முதல் சூழல் என்ன என்பதை அறிந்து, பிட்ச் எப்படி செயல்படுகிறது என்பதை அறிவேன். ஒருவேளை பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால், அதற்கேற்றபடி பந்துவீசுவேன்.

ஆனால் பந்து ஸ்விங் ஆகவில்லையென்றால், ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைன் மற்றும் லெந்தில் வீசுவேன். அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கு எட்ஜ் வாங்கும் பகுதியில் அதிகமாக பிட்ச் செய்து, டிரைவ் ஆட வைக்க முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து முகமது ஷமியின் பவுலிங் பற்றி ரவி சாஸ்திரி பேசிய போது, முகமது ஷமி முதல் பந்தை வீச ஓடி வரும் போது அதனை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு வாழ்த்து தான் சொல்ல முடியும். இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக சரியான லெந்தில் பவுலிங் செய்யும் ஒரே பவுலர் முகமது ஷமி தான் என்று பாராட்டியுள்ளார்.

Story first published: Saturday, November 18, 2023, 8:05 [IST]
Other articles published on Nov 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+