Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கள தோற்கடிக்க உங்க எல்லாருக்கும் தில் வேணும்… இருக்கா? எதிரணியை வம்பிழுக்கும் சென்னை வீரர்

Recommended Video

6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபத்தை வீழ்த்தியது சென்னை

சென்னை:சிஎஸ்கே அணியை வீழ்த்த வேண்டுமானால் நீங்கள் பல மடங்கு திறமையுடன் ஆட வேண்டும் என்று அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசியது.

இதையடுத்து, முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. வார்னர் 57 ரன்கள் எடுத்தார். மணீஷ் பாண்டே 83 ரன்கள் குவித்தார்.

சூப்பர் வாட்சன்

சூப்பர் வாட்சன்

தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர் வாட்சன் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு பந்து மீதமிருக்கையில் சென்னை வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் சென்னை அணி 16 புள்ளிகளுடன் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஹர்பஜன் சிங் கூறியதாவது : எப்போதும் சென்னை மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சியானது. உடல் நிலை காரணமாக 2 போட்டிகளில் விளையாடவில்லை.

இதயத்தை சோதித்தோம்

இதயத்தை சோதித்தோம்

தற்போது அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி. போட்டியை 19 ஓவரிலே முடிக்க திட்டமிட்டோம். ஆனால், இறுதி ஓவர்களில் நமது இதயத்தினை வீரர்கள் சோதித்து பார்த்தனர்.

வாட்சன் சிறப்பு

வாட்சன் சிறப்பு

வாட்சன் சிறப்பாக ஆடினார். சென்ற ஆண்டு இறுதிப்போட்டியில் அவர் தனியாக நின்று ஆடியது போல நேற்றைய போட்டியிலும் ஆடினார். சென்னை அணியின் ரசிகர்கள் இந்த மைதானத்தில் அற்புதமாக ஆதரவு அளித்தனர்.

பலம் வேண்டும்

பலம் வேண்டும்

எங்களை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்த அவர்கள் எங்களை விட பல மடங்கு பலத்துடன் விளையாடினால் மட்டுமே எங்களை வீழ்த்த முடியும் அந்த அளவிற்கு இங்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் என்று ஹர்பஜன் கூறினார்.

Story first published: Wednesday, April 24, 2019, 13:13 [IST]
Other articles published on Apr 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+