For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்

Recommended Video

கோலியை போல விளையாடுங்க ...பாக்.வீரருக்கு அறிவுரை வழங்கிய அக்தர்...

இஸ்லாமாபாத்: கோலி தான் உங்களின் ரோல் மாடல் என்றால் இனி நீங்கள் அவரை காப்பியடிங்க என்று பாக் வீரர் பாபர் ஆசத்துக்கு, சோயப் அக்தர் அறிவுரை கூறியுள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 49 ரன்களில் வென்றது. இதில் பாக் வீரர் பாபர் ஆசம் 69 ரன்களும், ஹாரிஸ் சோகைல் 89 ரன்களும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

அவர்களில் பாபர் ஆசம் , கோலியை ரோல் மாடலாக வைத்து விளையாடி வருகிறார். இந்த விஷயத்தை அவர் ஏற்கனவே வெளிப்படையாகவே கூறி இருந்தார். இந் நிலையில் பாபர் ஆசம் பற்றி கருத்து கூறியிருக்கும் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், கோலியை காப்பியடித்து அவர் விளையாடலாம் என்றார்.

கோலி ரோல் மாடல்

கோலி ரோல் மாடல்

அவர் மேலும் கூறியதாவது: நான் பாபர் ஆசமிடம் ஒரு விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிடிக்கும். அவர் தான் ரோல் மாடல் என்றால், அவரை போன்றே விளையாட கற்றுக் கொள்ளுங்கள்.

திறமை வேண்டும்

திறமை வேண்டும்

அணிக்கு ஒரு இக்கட்டான நிலை வந்தபோது எல்லாம், கோலி நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். அவரை போல் அதிகமாக ஒரு ரன்கள், இரு ரன்கள் ஓடுவதைக் கற்று, திறமையை மெருகேற்ற வேண்டும். கோலி, ரோகித், வில்லியம்ஸன் உள்ளிட்ட வீரர்கள் 50 ரன்கள் அடித்த பின் ஆக்ரோஷமாக இருக்கும்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

ரன்களை அதிகமாக, வேகமாக எடுப்பார்கள். பாபர் ஆசம், அதை கற்றுக் கொண்டு, அதிக ஷாட்களை அடிக்க பழக வேண்டும். சோகைலை 11 பேர் கொண்ட அணியில் வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தேன். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் சிறந்த வீரர். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சிறப்பாக ஆடி ரன் குவித்தார்.

பயம் வேண்டாம்

பயம் வேண்டாம்

பாபர் ஆசத்தை விட சோகைல் தான் சிறந்த வீரர் என்பேன். ரன் எடுக்க வேண்டும் வேட்கை தான் சோகைலின் ஆட்டத்தின் வழியே பாக். அணியை 300 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றது. பாகிஸ்தான் நல்ல இடத்தில் தற்போது உள்ளது. பயப்படாமல், எளிதாக போட்டியை அணுக வேண்டும்.

அருமையான வாய்ப்பு

அருமையான வாய்ப்பு

அரையிறுதிக்குள் நுழைய அருமையான வாய்ப்பு உள்ளது. அச்சமில்லாமல் அடுத்து வரும் போட்டிகளை அணுகினால், வெல்லலாம். அதேசமயம், இங்கிலாந்து, அடுத்து வரும் 3 போட்டிகளில் தோற்றால், நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார்.

அரையிறுதி பிரகாசம்

அரையிறுதி பிரகாசம்

தற்போது பாகிஸ்தான் 6 போட்டிகளில் 2 வெற்றிகள் உள்ளிட்ட 5 புள்ளிகளுடன் உள்ளது. அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அடுத்ததாக, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் மோத உள்ளது. அந்த 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வென்றால், அரையிறுதி வாய்ப்புகள் பிரகாசம்தான்.

Story first published: Monday, June 24, 2019, 18:40 [IST]
Other articles published on Jun 24, 2019
English summary
If your idol is kohli means play like him, shoaib akhtar says to babar azam.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X