For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரண்டே இரண்டு பந்துகள்.. பாகிஸ்தானின் தலைவிதி மாறிய தருணம்.. ஒருவேளை ஜெயிச்சிருக்கலாமோ.. என்ன ஆனது?

மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இரண்டே இரண்டு பந்துகளால் பாகிஸ்தான் அணி கோப்பையை நழுவவிட்டுள்ளது.

இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்த்த சூழலில் வெறும் 138 ரன்களை மட்டுமே எடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

பாகிஸ்தான் இன்னிங்ஸ்

பாகிஸ்தான் இன்னிங்ஸ்

அந்த அணியில் ஓப்பனிங் வீரர்கள் முகமது ரிஸ்வான் 15, முகமது ஹாரிஸ் 8, இஃப்திகார் அகமது டக் அவுட், சதாப் கான் 20 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களையும், ஷான் மசூத் 38 ரன்களையும் அடிக்க, 138 ரன்கள் எனக் கொண்டு சென்றனர்.

பாகிஸ்தான் போராட்டம்

பாகிஸ்தான் போராட்டம்

சுலபமான இலக்கு என நினைத்து வந்த இங்கிலாந்து அணியை அவ்வளவு எளிதாக வெல்லவிடவில்லை பாகிஸ்தான் பவுலர்கள். தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னுக்கும், கேப்டன் ஜாஸ் பட்லர் 26 ரன்களுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இதன் பின்னர் வந்த பிலிஃப் சால்ட் 10 ரன்களும், ஹாரி ப்ரூக் 20 ரன்களையும் மட்டுமே எடுத்து அவுட்டாகினர்.

தடுமாறிய இங்கிலாந்து அணி

தடுமாறிய இங்கிலாந்து அணி

இதனால் இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 97/4 என திணறி வந்தது. வெற்றி பெற 30 பந்துகளில் 41 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. விக்கெட்கள் விழுவதை பார்த்து உஷாரான பென் ஸ்டோக்ஸ் பதற்றத்தில் எந்தவித அதிரடியையும் காட்ட முடியாமல் சிங்கிள்களாக அடித்து வந்தார். இந்நிலையில் இஃப்திகார் வீசிய இரண்டே இரண்டு பந்துகள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றி அமைத்தது.

இரண்டே பந்துகள்

இரண்டே பந்துகள்

காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த சாஹீன் அஃப்ரிடி 15வது ஓவரை வீச வந்தார். ஆனால் முதல் பந்தை மட்டுமே வீசிவிட்டு, தன்னால் முடியவில்லை என பெவிலியனுக்கு சென்றுவிட்டார். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் நின்ற கேப்டன் பாபர் அசாம் மீதம் இருந்த 5 பந்துகளை வீச வேறு வழியின்றி பார்ட் டைம் பவுலரான இஃப்திகார் அகமதை அழைத்தார்.

ஸ்டோக்ஸின் யுக்தி

ஸ்டோக்ஸின் யுக்தி

இஃப்திகாரின் ஓவர் தான் சரியான நேரம் என நினைத்த ஸ்டோக்ஸ், பயனுள்ளதாக மாற்றிக்கொண்டார். முதல் 3 பந்துகளில் சிங்கிள்கள் மட்டும் செல்ல, கடைசி 2 பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் பறந்தது. நீண்ட நேரமாக பவுண்டரியே அடிக்காத இங்கிலாந்து, இஃப்திகாரின் ஓவரில் இருந்து நம்பிக்கை பெற்றது. அந்த ஓவரில் மட்டும் 13 ரன்கள் செல்ல 24 பந்துகளில் 28 ரன்கள் என்ற சூழலுக்கு வந்தது.

மாறிய தருணங்கள்

மாறிய தருணங்கள்

அதற்கு அடுத்த ஓவரில் முகமது வசீமின் ஓவரில் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் பறந்தன. இதனால் 19 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 138 ரன்களை அடித்து வெற்றியை பெற்றது. மேலும் 2வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Story first published: Sunday, November 13, 2022, 18:24 [IST]
Other articles published on Nov 13, 2022
English summary
Ifthikar ahmad's 2 Balls changed the whole match of Paksitan vs England in t20 world cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+