Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்விட்ச் ஹிட்டா அடிக்கப் பாக்குற? இப்போ பார் என் பீல்டிங்கை.. செமயாக பல்பு வாங்கிய பாகிஸ்தான் வீரர்

ஹைதராபாத் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் இப்திகார் அஹ்மத் திட்டம் போட்டு செய்த பீல்டிங் சொதப்பல் ரசிகர்கள் மத்தியில் குபீர் சிரிப்பை வரவழைத்தது.

இப்திகார் அஹ்மத், ஸ்லிப் பீல்டிங்கில் இருந்து கொண்டு, மேக்ஸ்வெல் அடித்த ஸ்விட்ச் ஹிட்டை தடுக்கிறேன் என முன் கூட்டியே திட்டம் போட்டு பல்பு வாங்கினார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக தங்களின் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் ஆடின.

ஆஸ்திரேலியா அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடியது. அந்த அணியின் கிளென் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி 77 ரன்கள் குவித்தார். அவர் 32வது ஓவரில் ஆடிக் கொண்டிருத்த போது தான் அந்த பீல்டிங் சொதப்பல் சம்பவம் நடந்தது.

Iftikhar Ahmed slip fielding blunder to Maxwell switch hit in Pak vs Aus match

32வது ஓவரை பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் முகமது நவாஸ் வீசினார். அப்போது ஸ்லிப் பீல்டிங் நின்று கொண்டு இருந்தார் இப்திகார் அஹ்மத்.

அந்த ஓவரின் நான்காவது பந்தை ஸ்விட்ச் ஹிட் ஆக அடிக்க முடிவு செய்த மேக்ஸ்வெல், பந்து வீசப்பட்ட உடன் பேட்டை இடது கை பக்கம் மாற்றினார். மேக்ஸ்வெல் ஸ்விட்ச் ஹிட் அடிக்க ஆயத்தமாவதை கண்ட அஹ்மத், "நானும் என் பீல்டிங் நிலையை மாற்றி, இந்த பந்தை கேட்ச் பிடிக்கிறேன் பார்" என உடனடியாக வலது பக்கம் சில அடிகள் எடுத்து வைத்தார்.

ஆனால், மேக்ஸ்வெல் அந்த பந்தை அடித்த போது, முன்பு இப்திகார் அஹ்மத் எங்கே பீல்டிங் நின்று இருந்தாரோ அங்கேதான் பந்து சென்றது. பீல்டிங் செய்யும் இடத்தை மாற்றாமல் இருந்திருந்தால் பந்தை பிடித்து இருக்கலாம்.

ஆனால், பந்து அஹ்மத் மற்றும் விக்கெட் கீப்பருக்கு இடையே எளிதாக சென்று பவுண்டரியை தொட்டது. கொஞ்சம் ஓவராக யோசித்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார் இப்திகார் அஹ்மத்.

முன்னதாக, இந்த ஓவரை வீசிய முகமது நவாஸ் ஒரு பீல்டிங் சொதப்பல் செய்து இருந்தார். அது இன்னும் வேடிக்கையானது. அந்த வேடிக்கையான சம்பவம் குறித்த செய்தி லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

எப்போதுமே பாகிஸ்தான் அணி பீல்டிங்கில் சொதப்பும். 2023 உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி தங்களின் பீல்டிங் சொதப்பலை தொடங்கி விட்டது. இதை திருத்திக் கொள்ளா விட்டால் அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறுவதே கடினமாக மாறி விடும்.

Story first published: Tuesday, October 3, 2023, 19:50 [IST]
Other articles published on Oct 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+