For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG - வரலாறு படைத்த இந்தியா.. 43 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தை வீழ்த்திய கதை

மும்பை : இந்த டெஸ்ட் மேட்சில் இரண்டு இங்கிலந்து பவுலர்கள் தலா 4 விக்கெடுக்கள் எடுத்தனர் ஒரு இன்னிங்சில்.இந்திய டீம் தரப்பில் இரண்டு பவுலர்கள் தலா 5 விக்கெடுக்கள் எடுத்தனர் ஒரு இன்னிங்சில்.மறுபடியும் பவுலர்கள் சாதனை.
இந்திய டீமின் ஒரு பவுலர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் எடுத்தார்.

அதே போல் இங்கிலாந்து டீம் ஆல் ரவுண்டர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.இரண்டு டீம்களிலும் ஒருவர் கூட சதம் எடுக்கவில்லை.
ஒரு இன்னிங்சின் மொத்த ஸ்கோர் 230 ரன் களை எட்டவில்லை, எந்த ஒரு டீமிற்கும்.
ஒரு ஆட்டக்காரரின் அறிமுக டெஸ்ட் மேட்ச் இது.இரண்டு டீம்களிலும் அனுபவம் மிக்க, புகழ் பெற்ற வீரர்கள் பங்கு பெற்றனர்.

IIndia vs England test history - 1981 Mumbai test famous win by Indian players

நான்கு இன்னிங்சிலும்பூஜ்ஜியம் (0 ) எடுத்தவர்கள் 7 வீரர்கள்.
ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இரு டீம்களின் ஆட்டக்காரர்கள் அந்த அந்த டீம்களின் ஒப்பனிங் பேட்ஸ்மேன் கள்.இந்த புகழ் பெற்ற மேட்ச் பம்பாயின் (இன்றைய மும்பை ) வான்கடே ஸ்டேடியமில் 1981 நவம்பர் 27 அன்று துவங்கியது.

டாஸ் வென்ற சுனில் கவாஸ்கர், இந்திய டீம் முதலில் பேட்டிங் செய்யும் என்று முடிவு செய்தார்.இங்கிலாந்து டீமின் பாப் வில்லீஸ் மற்றும் இயன் போத்தம் பவுலிங்கை துவக்கினார்கள்.இந்திய டீமின் பேட்டிங்கை துவக்க,
களம் இறங்கினவர்கள், கேப்டன் சுனில் கவாஸ்கர், கி ஸ்ரீகாந்த் ( K Srikanth ) ( அறிமுக டெஸ்ட் மேட்ச் ).

இந்திய டீமின் துவக்கம் எதிர் பார்த்த படி அமையவில்லை.முதல் விக்கெட் ஸ்கோர் 1 ரன் இருக்கும் பொழுது விழுந்தது.வில்லீஸ் வீசிய பந்தில் ஸ்ரீகாந்த் கொடுத்த கேச்சை பிடித்தவர், இங்கிலாந்து அணியின் கேப்டன் பிளெட்சர். ஸ்ரீகாந்த் ரன் எதுவும் எடுக்கவில்லை. (0)

1 - 1

ஆட வந்த திலிப் வெங்சர்கார், கவாஸ்கருடன் சேர்ந்து கவனமாக இருவரும் ஆடி வந்தனர்.வெங்சர்கார் (17 ) அவுட் .டில்லே ( Dilley ) பவுலர், கேட்ச் பிடித்தவர் தவரே ( Tavare)
2 பவுண்டரிகள் 34 பந்துக்களில்

40 - 2

முக்கியமாக மூன்று வேக பந்து வீரர்களும் மாறி, மாறி பந்துக்கள் வீசினர்.
கவாஸ்கர் அனாவசியமாக ஆடி டீமின் ரன்களை உயர்த்திக் கொண்டு இருந்தார்.
இவரும், அடுத்து வந்த ஜிஆர் விஸ்வநாத்தும் ஸ்கோரை 70 க்கு கொண்டு சென்ற நிலையில் போத்தமின் பந்தில், பாய்காட் கேட்ச் பிடிக்க, விஸ்வநாத் பெவிலியன் திரும்பினார்.1 பவுண்டரி 29 பந்துக்களில்எடுத்தது 8 ரன்கள்.

70 - 3

பொறுப்புடன் கவாஸ்கர் ஆடிக் கொண்டு இருக்கும் பொழுது, மறு முனையில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன.ஜோடி சேர்ந்த சந்தீப் பட்டில் 17 ரன்களில் அவுட் ஆனார்.போத்தம் போட்ட பந்தில் LBW முறையில்
2 பவுண்டரிகள் 36 பந்துக்களில்

104 - 4

கீர்த்தி அசாத் கவாஸ்கருக்கு கம்பெனி கொடுத்தார்.அரை சதம் தாண்டிய சுனில் கவாஸ்கர் அவுட்.அவரது ஸ்கோர் 55போத்தம் இவரது விக்கெட்டையும் வீழ்த்தினார்.
கேட்ச் பிடித்தது விக்கெட் கீப்பர் தேலர் ( Taylor )5 பவுண்டரிகள் 117 பந்துக்களில்

112 - 5

இந்த சமயத்தில் இங்கிலாந்து டீமின் கை ஓங்கி இருந்தது.கீர்த்தி அசாத், கபில் தேவ் ஜோடி 52 ரன்கள் சேர்த்தனர்.கபில் தேவ் பவுண்டரிகள் விளா சினார்.
கபில் தேவ் அவுட்.ஸ்கோர் 164 ஐ தொட்ட பொழுது
போத்தம் இவரது விக்கெட்டையும் வீழ்த்தினார்.கேட்ச் பிடித்தது விக்கெட் கீப்பர் தேலர் ( Taylor )8 பவுண்டரிகள் 50 பந்துக்களில், கபில் தேவ் ஸ்கோர் 38 ரன்கள்

164 - 6

ஸ்பின் பவுலர் அண்டர்வுட் போட்ட பந்தில் அவுட் ஆனார் கீர்தி அசாத். ( 14 )
கேட்ச் பிடித்தது மைக் காட்டிங்.2 பவுண்டரிகள் 45 பந்துக்களில்

164 - 7

மதன் லால் ரன் எதுவும் எடுக்கவில்லை. (0 )டில்லே ( Dilley ) பவுலர், கேட்ச் பிடித்தவர் தேலர் ( Taylor )

168 - 8

சிறிது நேரம் தாக்கு பிடித்தார் சயீத் கீர்மானி.அவரது ஸ்கோர் 12 ரன்கள்.2 பவுண்டரிகள் 20 பந்துக்களில் விக்கெட் எடுத்தவர் டில்லே ( Dilley )

179 - 9

கடைசியில் அவுட் ஆனவர் திலிப்
தோஷி. ரன் எடுக்கவில்லை ( 0 )

டில்லே ( Dilley ) பவுலர், கேட்ச் பிடித்தவர் தேலர்
( Taylor )

179 ஆல் அவுட்

ரவி சாஸ்திரி 3 * (நாட் அவுட் )

உபரி ரன்கள் 15

இங்கிலாந்து டீம் நான்கு பவுலர்களை பயன் படுத்தியது.

வில்லீஸ் 1 - 33
போதத்தம் . 4 - 72
டில்லே 4 - 47
அண்டர்வுட் 1 - 12

இங்கிலந்து டீம் பேட்டிங்
ஆட துவங்கி முதல் நாள் ஆட்டம் முடியும் முன்பே அவர்களது முதல் விக்கெட்டை இழந்தது.

மதன் லால் வீசிய பந்தில் கிரஹம் கூச் போல்ட் ஆனார்.
அவர் எடுத்தது 2 ரன்கள்.

3 - 1

முதல் நாள் இறுதியில் ஸ்கோர் 15 - 1

இரண்டாம் நாள் ஆடிய இங்கிலாந்து டீம் 166 ரன்களுக்கு சுருண்டது.( ஆல் அவுட் )
ஒப்பனர் பாய்க்காட்டும், ஒன் டவுன் வந்த கிறிஸ் தவரேயும் ஜோடி சேர்ந்து மிகவும் சிறப்பாக ஆடினார்கள்.நிதானமாகவும், பொறுமையுடன் ஆடிய இருவரும் பொறுப்பாக ஆடி ஸ்கோர் சேர்த்தனர்.

நெடு நேரம் நின்றும் விளையாடினார்கள்.நமது பவுலர்கள் பந்துக்கள் வீசியும் இவர்களது கூட்டணியை சுலபமாக பிரிக்க முடியவில்லை.
இருவரும் சேர்ந்து 90 ரன்களுக்கு மேல் எடுத்தனர். ஒரு வழியாக பாய்காட் அவுட் ஆனார் 60 ரன் களுக்கு.பந்து போட்டது கீர்தி அசாத். கேட்ச் பிடித்தது ஸ்ரீகாந்த்.
194 பந்துக்கள். 4 பவுண்டரிகள்.

95 - 2

விரைவில் டேவிட் கோவர் அவுட்.

5 ரன்கள்.

ரன் அவுட்.

19 பந்துக்கள். 1 பவுண்டரி.

105 - 3

பிளெட்சர் வந்தார். அனுபவ ஆட்டக்காரர், அவராலும் இந்திய ஸ்பின் பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை.
குறிப்பாக திலிப் தோஷயின் பந்துக் களை.

பிளெட்சர் அவுட். 15 ரன் கள் எடுத்தார்.
LBW மூலம் அவுட் செய்தவர் திலிப் தோஷி.

29 பந்துக்கள். 1 பவுண்டரி.

131 - 4

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற இயன் போத்தமிடம் ரசிகர்கள் அதிகம் எதிர் பார்த்தனர்.7 ரன்கள் எடுத்த இவர் தோஷி பந்தில் கவாஸ்கரிடம் கேட்ச் கொடுத்தார்.
எதிர் கொண்டது 16 பந்துக்கள்.

143 - 5

கிறிஸ் தவரேயும் அவுட்.கேட்ச் பிடித்தது ரவி சாஸ்திரி. பந்து வீசி விக்கெட் எடுத்தவர் தோஷி.தவரேயின் ரன்கள் 56239 பந்துக்கள். 5 பவுண்டரிகள்.

146 - 6

ஜான் எம்புரியும் ( John Embury ) அவுட்

LBW

ரன் எடுக்கவில்லை.
பூஜ்ஜியம் ( 0 )

147 - 7

அடுத்து கிரஹம் டில்லேயும் அவுட். பூஜ்ஜியம். ( 0)

போல்ட் ரவி சாஸ்திரி.

147 - 8

பாப் தேலர், அண்டர்வுட் ஜோடி கிட்ட தட்ட 11 ஓவர்கள் சமாளித்தனர், இந்திய டீமின் பவுலிங்கை.கபில் தேவின் பந்தில், கீர்மானியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் அண்டர்வுட். அண்டர்வுட் ஸ்கோர் 8 ரன்கள். எதிர் கொண்டது 29 பந்துக்கள்.

163 - 9

1 ரன் எடுத்த பாப்
வில்லீஸ் அவுட், கடைசி விக்கெட்.

166 ஆல் அவுட்.

39 பந்துக்கள் ஆடிய பாப் தேலர் ( Bob Taylor )1 பவுண்டரி அடித்தார்.

இவர் அவுட் ஆகவில்லை.

9* ரன்கள் (நாட் அவுட் )

உபரி 3 ரன்கள்.

இங்கிலாந்து டீம்மை நமது டீம்மை விட குறைவான ரன்கள் ஸ்கோரில் ஆல் அவுட் செய்த பெருமை நமது பவுலர்கள், பில்டர்களை சாரும். குறிப்பாக மிகவும் சிறப்பாக பவுலிங் செய்த திலிப் தோஷி.

இந்திய டீம் பவுலிங்

கபில் தேவ் 1 - 29
மதன் லால் 1 - 24
ரவி சாஸ்திரி 1 - 27
கீர்தி அசாத் 1 - 35

திலிப் தோஷி பவுலிங்
29.1 ஓவர் கள்
12. மெய்டன்கள்
39 ரன்கள்
5 விக்கெட்டுக்கள்

மூன்றாம் நாள் முடிவில்
இந்திய டீமின் இரன்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 9 விக்கெட்டுக் கள் இழப்பிற்க்கு 203 ரன்கள்

இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியது இந்திய டீமிற்கு.

இந்த இன்னிங்சிலும் முதலில் அவுட் ஆனது ஸ்ரீகாந்த். ரன் அவுட் 13 ரன்கள்.

19 - 1

அடுத்து அவுட் ஆனவர் வெங்சர்கார். 5 ரன்கள்.
தவரே கேட்ச் பிடித்தவர். பவுலர் போத்தம்.

24 - 2

கவாஸ்கரும், விஸ்வநாத்தும் தொடர்ந்தனர்.

கவாஸ்கர் அவுட். 14 ரன்கள்.
போத்தம் பந்து வீச கேட்ச் பிடித்தது தேலர்.

60 பந்துக்கள். 1 பவுண்டரி

முதல் இன்னிங்சிலும், கவாஸ்கர் இந்த முறையிலேயே இந்த ஜோடியிடம் அவரது விக்கெட் டை இழந்தார் .

43 - 3

விஸ்வநாத் , சந்தீப் பட்டில் இருவரும் இங்கிலாந்து டீமின்
பவுலிங்கை எதிர் கொண்டு ஆடி வந்தனர்.

போத்தம் வெகு நேர்த்தியாக பந்து வீசிக் கொண்டு இருந்தார்.

சந்தீப் பட்டில் அவுட். (13 )
LBW போத்தம்.

20 பந்துக்கள். 1 பவுண்டரி

72 - 4

விஸ்வநாத் பவுண்டரிகள் அடித்து தனது மற்றும் இந்திய டீமின் ஸ்கோரை நகர்த்தி வந்தார்.

38 பந்துக்களில் 37 ரன்களை குவித்த விஸ்வநாத் 4 பவுண்டரி கள் சேர்த்தார். அவுட் ஆனார்.

போத்தம் பந்து வீச கேட்ச் பிடித்தது தேலர்.

90 - 5

இந்த நிலையில் இங்கிலாந்து டீமின் ஆதிக்கம் ஓங்கி இருக்க, மேலும் உத்வேகத்துடன் அவர்கள் பவுலர்கள் பந்து வீச ஆரம்பித்தனர்.இந்திய டீமிற்கு தேவையாக இருந்தது விழும் விக்கெட்டுக்களை தடுத்து நிறுத்தி, மேலும் ரன்களை அதிகரிப்பு செய்வது.
ரவி சாஸ்திரி பிரமாதமாக விளையாடினார். உடன் அவருடன் நின்று ஆடியது கீர்தி அசாத்.

இங்கிலாந்து டீம் பவுலர்கள் வீசிய பந்து களை தடுத்து ஆடியும் ( defence ), அடித்து விளையாடியும் இந்த ஜோடி ரன்களை அதிகரிக்க செய்தனர்.
கீர்தி அசாத் ஸ்பின் பவுலர் எம்புரி வீசிய பந்தில் LBW முறையில் அவுட் ஆனார்.

57 பந்துக்கள். 1 பவுண்டரி
ரன்கள் 17

138 - 6

அடுத்து மைதானத்தில் விளையாட வந்த கபில் தேவ் புயல் வேகத்தில் பந்துகளை பறக்க விட்டார். ஓடியும் ரன்கள் சேர்த்தார். ரவி சாஸ்திரி, கபில் தேவ் இருவரும் இந்திய டீம் 150 ரன்கள் கடந்து செல்வதை கண்டனர். இங்கிலாந்து பவுலர்கள் முயன்று வந்தனர் விக்கெட்டுக்களை வீழ்த்த, குறிப்பாக கபில் தேவின்.

ரவி சாஸ்திரி டில்லே போட்ட பந்தில் LBW 33

134 பந்துக்கள். 2 பவுண்டரிகள்.

154 - 7

ஸயீத் கீர்மானி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பூஜ்ஜியம் (0)

157 - 8

கபில் தேவ், மதன்லால் சேர்ந்து ரன்களை உயர்த்தினர்.

இந்திய டீமின் ஸ்கோர் 200 ரன்கள கடந்தது.

கபில் தேவ் LBW வில்லீஸ்
46

50 பந்துக்கள். 5 பவுண்டரிகள்

203 - 9

கடைசி வீரர் தோஷி , மதன் லாலுடன் சேர்ந்து விளையாடினார்.

இருவரும் இந்திய டீமின். ஸ்கோரை நகர்த்தி சென்றனர்.

227 ரன்கள் இருந்த பொழுது இந்திய டீமின் 10 வது விக்கெட் விழுந்தது.

தோஷி அவுட் ஆனார், போத்தம் போட்ட பந்தில்.
7 ரன்கள்.

29 பந்துக்கள். 1 பவுண்டரி

மதன் லால் 17* (நாட் அவுட் )

39 பந்துக்கள். 0 பவுண்டரி

உபரி ரன்கள் 25

227 ஆல் அவுட்

இங்கிலாந்து டீம் பவுலிங்

வில்லீஸ் 1 - 31
டில்லே 1 - 61
எம்புரி 2 - 35

இயன் போத்தம்

22.3 ஓவர்கள்
3 மெய்டன் கள்
61 ரன்கள்
5 விக்கெட்டுக்கள்

நான்காவது தினம் இங்கிலாந்து டீம் இரண்டாவது இன்னிங் சை துவக்கியது.

அவர்களுக்கு வெற்றி அடைய போதிய நேரம் இருந்தது.

இலக்கு 241 ரன்கள்.

ஆனால், இங்கிலாந்து டீமின் துவக்கமே சரியாக அமையவில்லை.

முதல் விக்கெட் விழுந்தது ஸ்கோர் 2 ரன் இருக்கும் பொழுது.

கிரஹம் கூச் அவுட் 1 ரன்
கபில் பந்தில் கேட்ச் பிடித்தது கீர்மானி.

2 - 1

கிறிஸ் தவரே அவுட். 0

கபில் பந்தில் கேட்ச் பிடித்தது காவாஸ்கர்.

4 - 2

பாய்காட்டும், டேவிட் கோவர் இருவரும் நின்று நிதானமாக விளையாடினார்கள்.

கபில் தேவ், மதன்லால் வீசும் பந்துக்களை எதிர் கொண்டு சமாளிக்க திணறினார்கள்.

இருவரும் அருமையாக பந்து வீசிக் கொண்டு இருந்தனர்.

ஸ்கோர் 28 ல் டேவிட் கோவர் அவுட்.

17 பந்துக்கள் ஆடிய கோவர் 4 பவுண்டரிகள் அடித்தார்.

இவர் எடுத்தது 20 ரன்கள்.

கபில் தேவ் இவரது விக்கெட்டை LBW முறையில் வீழ்த்தினார்.

28 - 3

அடுத்து பெவிலியனுக்கு அவுட் ஆகி திரும்பியவர்
பாய்காட்.

LBW மதன் லால்.
3 ரன்கள்

எதிர் கொண்டது 23 பந்துக்கள்.

29 - 4

கேப்டன் பிளெட்சர் மற்றும் இயன் போத்தம் சேர்ந்து விக்கெட் இழப்புகளை தவிர்க்கவும், ரன்கள் கூட்டி வெற்றி இலக்கை அடையவும் நின்று நிதானமாக ஆட முயற்சி செய்தனர்.

இந்திய டீமின் வேக பந்து வீச்சாளர்கள் ஜோடியின் அட்டகாசமான பவுலிங்கை கையாள முடியாமல் தவித்தனர்.

இருந்தும் போத்தம் சந்தர்ப்பம் அமைந்த பொழுது அடித்தும் ஆடினார்.

மதன் லால் பந்தில், பிளெட்சர் LBW 3 ரன்கள்.

இவர் தாக்குப் பிடித்தது 14 பந்துக்கள்

42 - 5

இவரை தொடர்ந்து அவுட் ஆனது ஜான் எம்புரி ( John Embury )

கேட்ச் பிடித்தது கவாஸ்கர், விக்கெட் எடுத்தவர் மதன் லால்
1 ரன்

50 - 6

போத்தமும் டில்லேயும் 23 ரன்கள் எடுத்தனர்.

அசாத் கேட்ச் பிடிக்க இயன் போத்தம் அவுட் ஆனார், கபில் தேவ் போட்ட பந்தில். எடுத்தது 29 ரன்கள்.
விளையாடியது 28 பந்துக்கள். 3 பவுண்டரிகள். 1 சிக்ஸர்.

73 - 7

8 பந்து க ளில் 1 ரன் எடுத்த பாப் தேலர் போல்ட் ஆனார் மதன் லால் பவுலிங்கில்.

74 - 8

13 பந்துக்கள் எதிர் கொண்ட டில்லே இரண்டு பவுண்டரிகள்
அடித்து மொத்தம் 9 ரன்கள் குவித்தார்.
மதன் லால் பந்தில் அவுட் ஆனார்.

75 - 9

அந்த பக்கம் ஸ்பின் பவுலர் அண்டர்வுட் ஆடிக் கொண்டு இருந்தார்.
அவர் பங்கிற்கு ரன்களை எடுத்தார்.

கடைசி வீரர் பாப் வில்லீஸ், அண்டர்வுட் இருவரும் சேர்ந்து கடைசி விக்கெட்டிற்காக 27 ரன்களை குவித்தனர்

பாப் வில்லீஸ் அவுட்.
கபில் தேவ் பவுலர். கேட்ச் பிடித்தது கீர்மானி.

பாப் வில்லீஸ் 13 பந்துக்களில் 13 ரன்கள்
2 பவுண்டரிகள் உட்பட

அண்டர்வுட் 13* ( நாட் அவுட் ) 2 பவுண்டரிகள்

உபரி ரன்கள் 9

102 ஆல் அவுட்

இந்திய டீமில் மூன்று பவுலர்கள் மட்டுமே பவுலிங் செய்தனர்.

அதில் திலிப்
தோஷி வீசிய ஒரு ஓவரும்
மெய்டன் ஓவர்.

கபில் தேவ்

13.2. ஓவர்கள்
70 ரன்கள்
5. விக்கெட்டுக்கள்

மதன்லால்

12 ஓவர்கள்
6 மெய்டன்கள்
23 ரன்கள்
5. விக்கெட்டுக்கள்

இந்த டெஸ்டில் இங்கிலாந்து டீமின் விக்கெட் கீப்பர் பாப் தேலர் 7 கேட்ச்சுக்கள் பிடித்து அசத்தினார்.

கவாஸ்கர் 4, கீர்மானி 3 கேட்ச்சுக்கள் பிடித்தனர்.

மேட்சில் மொத்தம் 11 LBW அவுட்டுக்கள்

இரண்டு பக்கமும் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேன். அவர்கள்
கவாஸ்கர் ( 55) பாய்காட் ( 60 )

ஆட்ட நாயகனாக அறிவிக்கபட்டார் (Player of the Match ) கபில் தேவ்.

முதல் மூன்று நாட்கள் ஆட்டத்திற்கு பிறகு நான்காம் நாள் மேட்ச் நடைப் பெறவில்லை. ஓய்வு நாள் ( rest day )
அடுத்த நாள் ஆட்டம் தொடங்கி, அன்றே ( டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் ) மேட்ச் முடிந்து விட்டது.

இந்திய டீம் மகத்தான வெற்றி வாகை சூடியது.

138 ரன்கள் வித்தியா சத்தில் வெற்றி அடைந்தது இந்திய டீம்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, February 1, 2024, 21:17 [IST]
Other articles published on Feb 1, 2024
English summary
IIndia vs England test history - 1981 Mumbai test famous win by Indian players - இந்தியா , இங்கிலாந்து மறக்க முடியாத டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+