கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ட்வெயின் பிராவோ கேப்டன் டோணியின் சட்டை காலரை பிடித்து இழுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தீயாக பரவியுள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய வார்ம் அப் போட்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. போட்டி முடிந்த பிறகு நடந்த ஒரு சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போட்டி முடிந்த பிறகு ட்வெயின் பிரோவோ நேராக சென்று டோணியின் சட்டை காலரை பிடித்து இழுத்தார். இதை பார்த்து முதலில் டோணியும் லைட்டா சீரியஸ் ஆனார். அதன் பிறகு பிராவோ விளையாட்டாக செய்ததை தெரிந்து கொண்டு சிரித்தார்.
பிராவோ தனக்கு பிடித்த டோணியுடன் செல்லமாக அப்படி விளையாடியுள்ளார். பிராவோவும், டோணியும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.