Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொண்ணுகளோட கனெக்ஷன் வச்சிருந்தேன்.. அதுக்கு சாரி..! மாட்டிக்கிட்டு, மன்னிப்பு கேட்ட இளம் வீரர்

Recommended Video

Imam Ul Haq : பெண்களுடன் தொடர்பு.. மன்னிப்பு கேட்ட இளம் வீரர்- வீடியோ
Imam ul haq met and apologize pakistan cricket board director wasim khan

இஸ்லாமாபாத்: பல பெண்களுடன் வைத்திருந்த தொடர்பு குறித்து பாக். இளம் வீரர் இமாம் உல் ஹக், கிரிக்கெட் வாரிய இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான இன்ஜமாம் உல் ஹக்கின் மருமகனான இமாம் உல் ஹக் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களுடன் சேட்டிங் செய்த ஸ்க்ரீன் ஷாட்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உலக கோப்பையில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக்கின் ஆட்டம் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அவர் ஒரு சில பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் எக்குதப்பாக வெளியானது. ஆனால் இந்த போட்டோக்கள் பற்றியும், பெண்களுடனான தொடர்பு குறித்தும் இமாம் எதுவும் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் வாசிம் கான் கருத்து கூறியிருக்கிறார். அதில், இமாம் உல் ஹக் நேரில் சென்று மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து கூறியதாவது :

இது இமாமின் தனிப்பட்ட விவகாரம். ஆனாலும் வீரர்களின் ஒழுக்கமும் நெறி முறையும் அணிக்கு மிகவும் முக்கியம். அதனை கருத்தில் கொண்டு அவர் இனி மேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது. தாய் நாட்டுக்காக விளையாடும் போது அதிக பொறுப்பு உள்ளது. அதனை இமாம் உணர்ந்து அவர் இருக்க வேண்டும் என்று வாசிம்கான் கூறினார்.

Story first published: Tuesday, July 30, 2019, 12:56 [IST]
Other articles published on Jul 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+