Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புல்வாமா தாக்குதலால் பாக். டி20 தொடருக்கு கடும் சிக்கல்.. ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி!

துபாய் : பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 டி20 தொடரின் ஒளிபரப்பை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்திருந்த ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம், அந்த தொடரின் பாதியில் விலகுவதாக அறிவித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய நிறுவனமான ஐஎம்ஜி ரிலையன்ஸ், இந்த முடிவை எடுத்துள்ளது.

ஐஎம்ஜி ரிலையன்ஸ்

ஐஎம்ஜி ரிலையன்ஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பு உரிமையை ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம் ஜனவரி 4ஆம் தேதி பெற்று இருந்தது.

நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

கடந்த வியாழன் முதல் இந்த டி20 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதி தொடரிலேயே ஐஎம்ஜி ரிலையன்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளது, இந்த தொடரின் நேரடி ஒளிபரப்பில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பின்னடைவு

பின்னடைவு

இந்தியாவில் இந்த தொடரை ஒளிபரப்பி வந்த டிஸ்போர்ட் தொலைக்காட்சி, புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் அதை நிறுத்தி வைத்துள்ளது. இதுவும் இந்த தொடருக்கு ஏற்பட்ட பின்னடைவாக அமைந்துள்ளது.

திட்டம்

திட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது குறித்து தெரிவித்துள்ள பதிலில் எங்களிடம் மாற்றுத் திட்டம் உள்ளது. திங்கள் கிழமைக்குள் புதிய ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம் என கூறியுள்ளது.

புகைப்படங்கள் நீக்கம்

புகைப்படங்கள் நீக்கம்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் சுமார் நாற்பது இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்திய கிரிக்கெட் மைதானங்கள் பலவற்றில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

விளையாட்டும், அரசியலும் வேறு வேறு!

விளையாட்டும், அரசியலும் வேறு வேறு!

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இயக்குனர் வாசிம் கான், விளையாட்டும், அரசியலும் தனித்தனியாக பார்க்கப்பட வேண்டும். வரலாற்றை பார்த்தால் விளையாட்டு, குறிப்பாக கிரிக்கெட், மக்களுக்கும், நாடுகளுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்துள்ளது என கருத்து கூறியுள்ளார்.

உலகக்கோப்பையில் ஆடாதே!

உலகக்கோப்பையில் ஆடாதே!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் போல இந்திய அணிக்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது என்ற கோஷம் வலுத்து வருகிறது.

சிக்கல் என்ன?

சிக்கல் என்ன?

ஒருவேளை இந்தியா உலகக்கோப்பையில் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடுவதை தவிர்த்தாலும், நாக்-அவுட் போட்டிகளில் அப்படி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, February 19, 2019, 12:12 [IST]
Other articles published on Feb 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+