Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமலுக்கு வந்தது IMPACT PLAYER விதி.. சையது முஸ்தாக் அலி தொடரில் பயன்படுத்திய அணிகள்.. சுவாரஸ்யம் !

டெல்லி: பிசிசிஐ நடத்தும் பிரதான டி20 தொடரில் ஒன்று சையது முஸ்தாக் அலி போட்டிகளாகும். இதில் முதல் முறையாக இம்பேக்ட் பிளேயர் விதி அமலுக்கு வந்தது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இந்த விதியை கொண்ட வர பிசிசிஐ முயற்சி செய்கிறது, அதற்கு இந்த விதியை முன்னோட்டமாக சையது முஸ்தாக் அலி தொடரில் பிசிசிஐ அமல்படுத்தியது

இந்த விதியை முதல் நாளே ஏராளமான அணிகள் பயன்படுத்தியது. முதலில் அந்த விதியை பற்றி தற்போது காணலாம்.

இம்பேக்ட் விதி என்றால் ?

இம்பேக்ட் விதி என்றால் ?

அதாவது போட்டி தொடங்குவதற்கு முன் 4 மாற்று வீரர்களை ஒவ்வொரு அணியும் அறிவிக்க வேண்டும். இதில் எதாவது ஒரு வீரரை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். ஏற்கனவே பிளேயிங் லெவனில் இருக்கும் ஒரு வீரரை ஒரு இன்னிங்சில் 14வது ஓவர் முடிவதற்குள் இந்த இம்பேக்ட் பிளேயரை வைத்து மாற்றலாம். அந்த இம்பேக்ட் வீரரை பேட்ஸ்மேனுக்கு பவுலராகவோ, இல்லை பவுலருக்கு பேட்ஸ்மேனாகவோ கூட மாற்றலாம். இதில் எந்த கட்டுப்பாடும்

எப்போது பயன்படுத்தலாம்

எப்போது பயன்படுத்தலாம்

இதே போன்று ஏறகனவே ஆட்டமிழந்த பேட்ஸ்மேனுக்கு பதலாக புது பேட்ஸ்மேனை (14வது ஓவர் முடிவதற்குள்) கொண்டு வரலாம். இதே போன்று ஒரு வீரர் சில ஓவர் வீசிய பிறகு, அவர் பந்துவீச்சு எடுப்படவில்லை என தெரிந்தால் 14 வது ஓவருக்கு முன் அவரை மாற்றி வேறு ஒரு வீரரை இம்பேக்ட் பிளேயிராக மாற்றலாம்.

முதலில் டெல்லி அணி

முதலில் டெல்லி அணி

இந்த விதியை நேற்று முதல் முறையாக டெல்லி அணி பயன்படுத்தியது., 27 பந்துக்கு 47 ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன் ஹித்தேன் தலால்க்கு பதிலாக ஹிரித்திக் சோனேன் என்ற சுழற்பந்துவீச்சாளரை இம்பேக்ட் வீரராக டெல்லி அணி களமிறக்கியது. இதில் அவர் 3 ஓவர் வீசி 13 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார். இதே போன்று தமிழக அணி பந்துவீச்சாளர் நடராஜனுக்கு பதிலாக ஹரி நிசாந்த் என்ற பேட்ஸ்மேனை இம்பேக்ட் வீரராக மாற்றியது. எனினும் அவர் 36 பந்தில் 33 ரன்கள் எடுக்க தமிழக அணி தோல்வியை தழுவியது.

மற்ற அணிகள்

மற்ற அணிகள்

இதே போன்று மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடகா அணி சதம் விளாசிய படிக்கலுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபாலை இம்பேக்ட் வீரராக மாற்றியது. இதில் அவர் 3 ஓவர் வீசி 15 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். முதல் நாளே சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய இந்த விதி சில ரசிகர்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது.

Story first published: Wednesday, October 12, 2022, 18:30 [IST]
Other articles published on Oct 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+