மும்பை : ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் விதிக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த விதி கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் இன்னிங்க்ஸில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஒரு வீரரை நீக்கி விட்டு அவருக்கு பதில் வேறு வீரரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தால், சிவம் துபேவை ஒரு பேட்ஸ்மேனாக பயன்படுத்திவிட்டு பின் பந்து வீசும் போது அவருக்கு பதில் வேறு ஒரு பந்துவீச்சாளரை தேர்வு செய்யும்.

இதனால் ஒவ்வொரு அடியும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துவிட்டு 200 ரன்களுக்கு மேல் அடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த விதியை நீக்க வேண்டும் என பல அணி நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இம்பேக்ட் விதியின் மூலம் இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய ஆல்ரவுண்டர்கள் கிடைக்காமல் போக வாய்ப்பு இருப்பதாக ரோகித் சர்மா குற்றம் சாட்டி இருக்கிறார். உதாரணத்திற்கு வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சை பயன்படுத்தும் ஐபிஎல் அணிகள் அவருடைய பேட்டிங்கை பயன்படுத்தாமல் போய்விடுகிறது. இதனால் ஆல் ரவுண்டர்கள் கிடைக்காமல் போக வாய்ப்பு இருப்பதாக ரோகித் சர்மா கூறியிருந்தார்.
இந்த நிலையில் இம்பாக்ட் விதி வரும் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தொடரும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு நடைபெறும் சையது முஸ்தாக் அலி தொடரில் இம்பேக்ட் விதியை ரத்து செய்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் தொடரை விட சையது முஸ்தாக் அலி தொடரில் பல ஆல்ரவுண்டர்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
இதனால் இம்பாக்ட் விதியை கொண்டு வந்தால் ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக இந்த விதியை தற்போது பிசிசிஐ அதிரடியாக நீக்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து வரும் ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் இம்பேக்ட் விதி இருக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.