Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே வருஷத்துல இத்தனையா.. 2022ல் இந்திய கிரிக்கெட்டை உலுக்கிய 5 முக்கிய மாற்றங்கள்.. நியாபகம் உள்ளதா?

சென்னை: 2022ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் ரசிகர்கள் யாருமே எதிர்பார்த்திராத பல முக்கிய மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2022ம் ஆண்டு சற்று மோசமாக அமைந்தது என்றே கூறலாம். ஏனென்றால் தொடர்ச்சியாக முக்கிய தொடர்களில் தோல்விகளை மட்டுமே பெற்றிருந்தன.

ஆசிய கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை தொடர் என அடுத்தடுத்து 2 முக்கியமான தொடர்களில் மோசமாக தோற்றது. ஆனால் இதற்கெல்லாம் இந்திய கிரிக்கெட்டில் செய்யப்பட்ட 5 முக்கிய மாற்றங்கள் காரணம் எனக்கூறலாம்.

கோலியின் விலகல்

கோலியின் விலகல்

2022ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவின் முதுகெலும்பாக பார்க்கப்படும் கேப்டன் விராட் கோலி பதவியில் இருந்து விலகினார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கேப்டன்சியில் இருந்து 2021ம் ஆண்டிலேயே விலகிய போதும், கடைசியாக வைத்திருந்த டெஸ்ட் கேப்டன்சியை ஜனவரி மாதமே ரோகித்தின் கையில் ஒப்படைத்தார்.

பிசிசிஐ தலைமை

பிசிசிஐ தலைமை

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் மீண்டும் சவுரவ் கங்குலி தான் நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. பிசிசிஐ-ன் நிர்வாக பதவிகளில் 6 வருடங்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற விதிமுறையையும் உச்சநீதிமன்றம் வரை சென்று தகர்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கங்குலியை முந்தி ரோஜர் பின்னி பிசிசிஐ-ன் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய தலைமையின் கீல் இந்திய கிரிக்கெட் இயங்கி வருகிறது.

தேர்வுக்குழு நீக்கம்

தேர்வுக்குழு நீக்கம்

இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய தாக்கம் தேர்வுக்குழுவை மாற்றியது தான். டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த முறை கோப்பையை வென்றே தீரும் என எதிர்பார்க்கப்பட்டு, அது ஏமாற்றத்தில் முடிந்ததால் பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்தது. சேட்டன் சர்மா தலைமையிலான மொத்த தேர்வுக்குழுவையும் அதிரடியாக நீக்கியது.

ஆலோசனை குழு

ஆலோசனை குழு

டி20 உலகக்கோப்பை தோல்வியால் புதிதாக குழு ஒன்றும் இந்திய கிரிக்கெட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அதாவது இந்திய கிரிக்கெட் ஆலோசகர் குழு என பெயர் கொண்ட அந்த குழு உறுப்பினர்கள், அணியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், முடிவுகள் குறித்து அலசி ஆராய்ந்து பார்ப்பார்கள். மேலும் அதில் மாற்றங்களை கொண்டு வரவும் அவர்கள் பரிசீலிக்கலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தனித்தனி கேப்டன்கள்

தனித்தனி கேப்டன்கள்

2022ம் ஆண்டில் வந்த மாற்றங்களை விட, அடுத்தாண்டு வரவுள்ள மாற்றத்திற்கான முடிவையும் தற்போதே பிசிசிஐ ஆலோசித்துவிட்டது. அதாவது இந்திய ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு தனி கேப்டனும், டி20 அணிக்கு தனி கேப்டனும் நியமிக்கப்படவுள்ளது. அதன்படி ஹர்திக் பாண்ட்யா டி20 அணியின் கேப்டனாக செயல்படுவார் எனத்தெரிகிறது. டி20க்கு என தனி பயிற்சியாளரும் கொண்டு வரப்படலாம் எனக்கூறப்படுகிறது.

Story first published: Saturday, December 17, 2022, 18:46 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+