For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் பொறுப்பை பிரிச்சி கொடுக்கறதெல்லாம் இந்தியாவுக்கு செட் ஆகாது... நாசர் ஹுசைன்

டெல்லி : இங்கிலாந்தில் உள்ளதைபோல கேப்டன் பொறுப்பை பிரித்துக் கொடுப்பதெல்லாம் இந்தியாவிற்கு சரிபட்டு வராது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

2 கேப்டன் எல்லாம் இந்தியாவுக்கு செட் ஆகாது - நாசர் ஹுசைன் கருத்து

இந்திய கேப்டன் விராட் கோலி கம்பீரமானவர் என்றும், அவர் தன்னுடைய பொறுப்புகளை பிரித்து கொடுக்க விரும்ப மாட்டார் என்றும் ஹுசைன் கூறியுள்ளார்.

ஆனால் இந்திய பயிற்சியாளர் பணியை பிரித்து கொடுத்திருப்பது மிகசிறந்த முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து

முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து

இந்திய தலைமை பயிற்சியாளர் தலைமையிலான பயிற்சியாளர்கள் இந்திய வீரர்களின் விததியாசமான மனநிலையைய சிறப்பாக எதிர்கொண்டு, அவர்களை சிறப்பாக கையாண்டு வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ சிங் தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரி தலைமையில் வீரர்கள சிறபபாக விளையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளர். ஆயினும் பயிற்சயாளர்கள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.

கேப்டன் பதவியை பிரித்தளிப்பது செட் ஆகாது

கேப்டன் பதவியை பிரித்தளிப்பது செட் ஆகாது

இதனிடையே, இங்கிலாந்தில் செயல்பட்டு வருவது போல இந்தியாவில் கேப்டன் பதவியை பிரித்தளிப்பது சரியாக வராது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இயான் மார்கன் மறும் ஜோ ரூட் ஆகியோர் தங்களுக்குள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் ஆனால், தன்னுடைய பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள கேப்டன் விராட் கோலி ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பொறுப்புகளை பகிர ஒப்புகொள்ள மாட்டார்

பொறுப்புகளை பகிர ஒப்புகொள்ள மாட்டார்

கேப்டன் பொறுப்பை பகிர்ந்தளிப்பது என்பது கேப்டனின் குணநலனை சார்ந்தது என்றும் கேப்டன் விராட் கோலி கம்பீரமான மனநிலையை கொண்டுள்ளவர் என்பதால் அவர் தன்னுடைய பொறுப்புகளை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

சிறப்பானது என கருத்து

சிறப்பானது என கருத்து

ஆனால் கடந்த ஆண்டு உலக கோப்பை தொடர் முதல் பயிற்சியாளர் பொறுப்புகளை பிரித்து கொடுத்துள்ளது பாராட்ட வேண்டிய விஷயம் என்றும் ஹுசைன் தெரித்துள்ளார். இதன்மூலம் அதிகப்படியான கவனம் செலுத்தி பயிற்சிகளை அவர்கள் வீரர்களுக்கு அளிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 13, 2020, 20:40 [IST]
Other articles published on May 13, 2020
English summary
Split captaincy won't work for India -Nasser Hussain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+