For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 போட்டிகள், 60 விக்கெட்டுகள்.. வெல்டன் இந்தியா! உலக சாதனை சமன்!!

By Veera Kumar

ஆக்லாந்து: நடப்பு உலக கோப்பையில் இந்தியா இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும், எதிரணிகளின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி நிர்மூலமாக்கியுள்ளது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா கடந்த உலக கோப்பையில் படைத்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.

இந்திய பவுலர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில், உலக கோப்பையில் அவர்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளனர். உலக கோப்பையில் இதுவரை விளையாடிய போட்டிகளில் எதிரணிகளை ஆல்அவுட் செய்து கலக்கியுள்ளனர் இந்திய வீரர்கள்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 47 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

தென் ஆப்பிரிக்கா மோசம்

தென் ஆப்பிரிக்கா மோசம்

2வது லீக் ஆட்டத்தில் 40.2 ஓவர்களில், தென் ஆப்பிரிக்காவை 177 ரன்களில் ஆல் அவுட் செய்தது இந்தியா.

யு.ஏ.இயை சுருட்டியது

யு.ஏ.இயை சுருட்டியது

3வது லீக் போட்டியில், 31.3 ஓவர்களிலேயே, யு.ஏ.இ அணியை 102 ரன்களில் சுருட்டியது இந்தியா.

வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ்

44.2 ஓவர்களில், வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா. இது நான்காவது லீக் ஆட்டம்.

அயர்லாந்து

அயர்லாந்து

அதிரடி காண்பித்த அயர்லாந்தை, கடைசி கட்டத்தில் கட்டுப்படுத்தி 49வது ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா.

ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே

இன்று ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியிலும், நடுவில் சிறிது ரன்களை வாரிக் கொடுத்த இந்திய பவுலர்கள், அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள், கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை சாய்த்து, 48.5 ஓவர்களில் 287 ரன்களுக்கு அந்த அணியை ஆல்-அவுட் செய்தனர்.

தென் ஆப்பிரிக்க சாதனை சமன்

தென் ஆப்பிரிக்க சாதனை சமன்

இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே படைத்திருந்த சாதனையை, இந்தியா இன்று சமன் செய்தது. 2011 உலக கோப்பையின்போது, தென் ஆப்பிரிக்கா, தொடர்ந்து 6 அணிகளை, நிர்மூலமாக்கி, 60 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது, குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 14, 2015, 12:02 [IST]
Other articles published on Mar 14, 2015
English summary
This might be a batsmen's World Cup in Australia and New Zealand with batting records being blown away. But try telling that to Indian bowlers. They have been exceptional in each game and now have claimed a record.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+