For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இம்ரான் கானுக்கு இந்தியக் குழந்தை..... முன்னாள் மனைவி சரமாரி புகார்!

பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்கு இந்தியக் குழந்தை உள்ளது என்று அவருடைய முன்னாள் மனைவி கூறியுள்ளார்.

Recommended Video

இம்ரான் கானுக்கு இந்தியக் குழந்தை....முன்னாள் மனைவி புகார்!- வீடியோ

டெல்லி: கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் சகலகலா வல்லவனாக இருந்தவர் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். அவருக்கு இந்தியாயர்கள் உள்பட சட்டவிரோதமாக 5 குழந்தைகள் உள்ளன என அவருடைய முன்னாள் மனைவி ரேஹம் கான் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

65 வயதாகும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், தற்போது முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை 1995ல் திருமணம் செய்தார். 2014ல் விவாகரத்து பெற்றார். அதன்பிறகு 2015 ஜனவரியில் ரேஹம் கானை மணந்தார். அந்தாண்டு அக்டோபரில் விவகாரத்து பெற்றார். இந்தாண்டு துவக்கத்தில் புஷ்ரா மேனகா என்பவரை மணந்தார்.

Imran khan has illegitimate children

சட்டப்பூர்வமாக இரண்டு குழந்தைகள் உள்ளதை இம்ரான் கான் அறிவித்துள்ளார். இதனிடையில் அமெரிக்காவைச் சேர்ந்த சீடா வொயிட் மூலம் டிரியான் வொயிட் என்ற மகள் உள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

இதனிடையில் இம்ரான் கானுடன் 10 மாதங்கள் குடும்பம் நடத்திய ரேஹம் கான், தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். அதில் இம்ரான் கான் குறித்த பல ரகசியங்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ரேஹம் கான் கூறியுள்ளதாவது:

தனது கிரிக்கெட் வாழ்க்கையின்போது, பல பெண்களுடன் இம்ரானுக்கு தொடர்பு இருந்துள்ளது. அதன் மூலம் அவருக்கு சட்டவிரோதமாக 5 குழந்தைகள் உள்ளன. அதில் மூத்த குழந்தைக்கு தற்போது 34 வயதாகிறது. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

இதுவரை இந்த ரகசியங்களை அந்த பெண்கள் வெளியில் சொல்லாததற்கு, அவர்கள் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பதுதான் காரணம். என்னுடைய திருமணத்துக்குப் பிறகு இம்ரான் கான் இதை என்னிடம் தெரிவித்தார்.

இதைத் தவிர அவர் ஹோமோ செக்சாகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் பலருடனும், தனது கட்சியில் சிலருடனும் அவர் உறவு வைத்திருந்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு பரபரப்பு புகார்களை தனது சுயசரிசையில் ரேஹம் கான் அடுக்கியுள்ளார்.

Story first published: Friday, July 13, 2018, 13:45 [IST]
Other articles published on Jul 13, 2018
English summary
Imran khan has illegimate children including indidans.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+