வயது 40…!! 100வது ஒருநாள் போட்டி..!! இதைவிட இந்த மனுசனுக்கு வேற என்ன சாதனை வேண்டும்..!!
Recommended Video
லண்டன்: வங்கதேச அணிக்கு எதிராக தனது 100வது ஒருநாள் போட்டியில் இம்ரான் தாஹிர் விளையாடி புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் நடப்பு உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளன. ரவுண்ட் ராபின் முறையிலான லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 1992 உலகக் கோப்பைக்குப் பின் முதல் முறையாக ரவுண்ட் ராபின் சுற்று மூலம் லீக் போட்டிகள் நடத்தப் படுகின்றன.

பவுலிங்
உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடின. அந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆரம்பமே அதிர்ச்சி
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய், பேர்ஸ்டோவ் களமிறங்கினார். இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரை, முதல் ஓவர் வீச டூபிளெசிஸ் அழைத்தார். இதற்கு, கை மேல் பலனும் கிடைத்தது. 2வது பந்திலேயே, பேரிஸ்டோவ்வை, டக்-அவுட்டாக்கி வெளியேற்றினார்.

முதல் ஓவரில் விக்கெட்
இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் முதல் ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இம்ரான் படைத்துள்ளார். மேலும் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

அறிமுக போட்டி
தற்போது மேலும் ஒரு சாதனையை படைத்திருக்கிறார் இம்ரான் தாஹிர். 40 வயதாகும் தாஹிர் 2011ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

அதிரடி தாஹிர்
இளம் கிரிக்கெட் வீரர்கள் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தனது 32வது வயதில் தான் கிரிக்கெட்டிலேயே அறிமுகமானவர் தாஹிர். அறிமுகமானதிலிருந்தே அதிரடியான தனது சுழலால் பல விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது 37வது வயதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறினார்.

100வது போட்டி
தற்போது நடப்பு உலக கோப்பை தொடரில் 2வது சாதனை ஒன்றை அவர் படைத்திருக்கிறார். அதாவது, வங்கதேச அணிக்கு எதிராக தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடியது தான். அந்த போட்டியின் மூலம் இம்ரான் தாஹிர் விளையாடி புதிய சாதனையை படைத்திருக்கிறார். அவருக்கு அணியின் சக வீரர்களும், நிர்வாகமும் வாழ்த்துகளை கூறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications