Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MS Dhoni: தல கையில் பந்து போனது.. அவுட்டுக்கு முன்பே துள்ளிக்குதித்த தாஹிர்.. வைரல் வீடியோ

Recommended Video

தோனியிடம் சிக்கிய கொல்கத்தா வீரர்கள்... ஸ்டம்பிங் ஆன பரிதாபம்

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், சென்னை வீரர் தாஹிர் வீசிய பந்தை பேட்ஸ்மேன் தவறவிட, தோனி ஸ்டம்ப் செய்வதற்கு முன்னதாகவே இம்ரான் தாஹிர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கொல்கத்தா, சென்னை அணிகளுக்கிடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் சென்னை பவுலிங்கை தேர்வு செய்தது. அப்போது அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கூக்லி வீசினார்.

அந்த பந்தை அடிக்க முயன்ற இளம் பேட்ஸ்மேன் கில் தவறவிட்டார். அந்த பந்து நேராக தல தோனி கையில் சிக்கியது. அவரும் கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப் செய்தார்.

கில் அவுட்

கில் அவுட்

அப்போது அதன் முடிவு மூன்றாம் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அது அவுட் என்று அறிவிக்கப்பட்டது. பல முறை இந்த காட்சியை போட்டு பார்த்து முடிவை அறிவித்தனர்.

முன்னரே கொண்டாட்டம்

ஆனால் பந்துவீசிய தாஹீர், தோனியிடம் பந்து சென்றதும், அவர் ஸ்டம்ப்ட செய்வதற்கு முன்னதாகவே விக்கெட் வீழ்த்திய கொண்டாட்டத்தில் துள்ளிக் குதித்தார். அவரது இந்த செயல் தோனி மீது தாஹீர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை உணர்த்துவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மின்னல்வேக செயல்

மின்னல்வேக செயல்

உற்சாகத்தில் குதித்த தாஹிர் அமோகமாக மகிழ்ச்சி அடைந்தார். தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கை கிரிக்கெட் உலகம் நன்கு அறிந்த ஒன்று. தலயின் கையில் பந்து போனால் பேட்ஸ்மேன்கள் பெவிலியனுக்கு நடையை கட்டுவது வழக்கம்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

அந்த சூழ்நிலையில், தற்போது பந்து வீச்சாளர் ஒருவர் விக்கெட் விழும் முன்னரே தோனி கைக்கு பந்து சென்றால் அது விக்கெட் தான்... மாற்றமே இல்லை என்று முடிவு எடுத்து செயல்பட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் பவுலர்கள் இது போன்று முடிவெடுக்க தொடங்கியிருப்பது இனி வாடிக்கையாகும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வென்றது சென்னை

வென்றது சென்னை

நடப்பு சீசனில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய அணிகள் சிறப்பாக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தன. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியை வெறும் 108 ரன்களுக்கு சுருட்டி, அந்த ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது சிஎஸ்கே.

Story first published: Wednesday, April 10, 2019, 14:57 [IST]
Other articles published on Apr 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+