Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

VIDEO:இவர் தான் ஜூனியர் இம்ரான் தாஹிர்… உருவாகிறது அடுத்த வாரிசு.. வைரல் வீடியோ

சென்னை:சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர், தமது மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஐபிஎல் தொடருக்கான லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் போட்டி நாளை நடைபெறுகிறது. அந்த போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.

Imran tahir gives training to his son, video goes viral

தற்போதைய சென்னை அணியில் இடம்பெற்று இருப்பவர் நட்சத்திர வீரர் இம்ரான் தாஹிர். போட்டியின் போது விக்கெட் எடுத்து விட்டால் போதும். அப்பப்பா.... மகிழ்ச்சியில் துள்ளி குதித்தபடி... இரண்டு கைகளையும் பறவை போல விரித்துக் கொண்டு மைதானத்தில் அவர் வலம் வருவது ஸ்டைல்.

அதனால்.. தாஹிருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்லப் பெயரும் அணியில் உண்டு. தோனியின் தலைமையில் அணியில் விளையாடுவதை பெருமையாக நினைப்பவர். அவர் மைதானத்தில் ஓடுவதை வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் பார்த்து ரசிப்பார்கள். தாஹிர் ஓடுவதை வைத்து பல மீம்ஸ்களும் வெளியாகி சக்க போடு போட்டன.

இந்நிலையில் அவர் தனது மகனுக்கு மைதானத்தில் பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பந்தை தூக்கிபோட்டு அதை எடுத்து வீசச் சொல்லி பயிற்சி கொடுக்கிறார் இம்ரான். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து ஜூனியர் தாஹிர் ரெடியாகிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Monday, May 6, 2019, 13:26 [IST]
Other articles published on May 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+