தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் இம்ரான் தாகீரை இழிவு செய்த பாக். தூதரகம்
பர்கிங்காம்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் இம்ரான் தாகீர் பர்மிங்காமில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தம்மை இழிவுபடுத்தியுள்ளதாக ட்வீட்டரில் குமுறியுள்ளார்.
பாகிஸ்தானில் வரும் 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை உலக லெவன் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே 20 ஓவர் போட்டிகள் லாகூரில் நடைபெறுகின்றன. உலக லெவன் அணியில் தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தாகீர் இடம்பெற்றுள்ளார்.

இதனால் பர்கிங்காமில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு தமக்கும் குடும்பத்தினருக்கும் விசா பெற சென்றார் இம்ரான் தாகீர். ஆனால் அங்கே இம்ரான் தாகீரை 5 மணிநேரம் காக்க வைத்திருக்கின்றனர்.
பின்னர் அலுவலக நேரம் முடிந்துவிட்டதாக கூறி அவரை வெளியேற்றியிருக்கின்றனர். இதனால் நொந்து போன இம்ரான், தூதரிடம் முறையிட்டு விசாக்களை பெற்றார். இது தொடர்பாக தமது ட்விட்டரிலும் இம்ரான் தாகீர் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இம்ரான் தாகீர் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளளயாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications