இம்ரான் தாஹிர் புதிய சாதனை… இணையத்தில் வைரலான வெற்றிக் கொண்டாட்டம்
லார்ட்ஸ்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்ரிக்க அணி வீரர் என்ற சாதனையை, இம்ரான் தாஹிர் தட்டிச் சென்றார்.
லண்டன், லாட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இம்ரான் தாஹிர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக்கின் விக்கெட்டை தாஹிர் வீழ்த்தினார்.
அந்த விக்கெட்டையும் சேர்த்து, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இம்ரான் தாஹிர் மொத்தம் 39 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதையடுத்து, உலக கோப்பை ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகளை எடுத்த தென் ஆப்ரிக்க அணி வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

38 விக். சாதனை
தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனாலட். உலக கோப்பை போட்டியில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதே இதுவரை அந்த அணியின் சாதனையாக இருந்து வந்தது.

39 விக். சாதனை
மொத்தம் 25 போட்டிகளில் டொனால்ட் 38 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். ஆனால், 19 போட்டிகளிலேயே 39 விக்கெட்டுகளை வீழ்த்தி, இம்ரான் தாஹிர், டொனால்டின் சாதனையை முறியடித்துள்ளார்.

வெற்றி கொண்டாட்டம்
போட்டியில் பக்கர் ஜமானை வீழ்த்தும் போது, பந்தை ஆம்லா கேட்ச் பிடிப்பதற்கு முன்னரே இம்ரான் தாஹிர் தனது வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கினார். பராசக்தி எக்ஸ்பிரசான அவர், மிக, மிக வேகமாக ஓடினார்.

இணையத்தில் வைரல்
தொடர்ந்து இமாம் உல் ஹக்கை அவரே பந்து போட்டு அவரே கேட்ச் பிடித்து அசத்தினார். கேட்ச் பிடித்ததும் போதும்... அவர் பிடித்த ஓட்டம் இருக்கே... சக வீரர்களே அவரை பிடிக்க முடியாமல் ஓடினர். அவரின் வழக்கமான விக்கெட் கொண்டாட்டம் தான் தற்போது வைரலாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications