சிஎஸ்கே To சர்ரே….! முதலில் ஆரோன் பின்ச்.. இப்போ பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிர்.. வாவ்..! கிரேட்..!
மும்பை:சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர், இஙகிலாந்தில் கவுண்டி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத வீரர் என்ற பட்டியலில் இடம்பிடித்து இருப்பவர் இம்ரான் தாஹிர். சென்னை அணியில் இடம்பெற்றிருக்கும் சுழற் பந்து வீச்சாளரான அவர் தோனியின் நம்பிக்கைக்குரியவர். அதே போல தோனியின் ஆலோசனைகளை இம்மியளவும் பிசகாமல் பின்பற்றுபவர்.
அந்த அணியின் அதிக வயதான வீரர் என்ற பட்டியலில் தாஹிருக்கு இடம் உண்டு. விக்கெட்டை வீழ்த்திவிட்டால் கைகளை பறவையின் இறக்கை போல விரித்துக் கொண்டு ஓடுவார். பராசக்தி படத்தில் ஓடினாள், ஓடினாள் என்று வசனம் போல இருப்பதால் அவருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என்ற பெயரும் உண்டு.

சர்ரே அணியில் தாஹிர்
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தாஹீர் அடுத்தாக இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் விடாலிட்டி டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனை சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப் உறுதி செய்திருக்கிறது. அந்த அணியில் ஆரோன் பின்சுக்கு பிறகு 2வது வெளிநாட்டு வீரராக இணைந்துள்ளார்.

உலக கோப்பை தொடர்
மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள ஐசிசி உலக கோப்பையில் தென் ஆப்ரிக்க அணியில் இம்ரான் தாஹிர் இடம்பெற்றுள்ளார். இதுவே அவரது கடைசி சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட் தொடராகும். அதன் பிறகு, அவர் சர்ரே அணியில் இணைகிறார்.

இசெக்ஸ் அணி
ஜூலை 19ம் தேதியன்று தொடங்க உள்ள முதல் போட்டியில் சர்ரே அணி இசெக்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த டி20 தொடர் முழுவதும் இம்ரான் தாஹிர் பங்கேற்க உள்ளார். இது குறித்து தாஹிர் கூறியிருப்பதாவது: புதுப்புது சவால்களை எதிர்கொள்வது உற்சாகமாக இருக்கிறது.

பெருமையான விஷயம்
கவுண்டி கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சர்ரே அணியில் விளையாட இருப்பது எனக்கு பெருமையான விஷயமாகும். சர்ரே ஒரு சிறந்த கவுண்டி கிரிக்கெட் அணி. அப்படிபட்ட அணியில் எனது பங்களிப்பை சிறப்பாக அளித்து கோப்பையை வெல்ல உதவியாக இருப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications