For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தீயணைப்பு வீரராக மாறிய க்ளென் மாக்ஸ்வெல் - புதரில் பற்றிய தீயை அணைக்கப் போராட்டம்

லான்கெஸ்டன் : பிக் பாஷ் லீக் தொடரின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் க்ளென் மாக்ஸ்வெல், தங்களுடைய போட்டிக்கு ஆயத்தமாக மேற்கொண்ட பணி அனைவரையும் கவர்ந்துள்ளது.

பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியினர் மோதிய போட்டி துவங்குவதற்கு முன்னதாக அருகில் இருந்த புதரில் தீப்பற்றியது. இதை கண்ட மாக்ஸ்வெல், தீயணைப்பானைக் கொண்டு அந்த தீயை அணைக்க முற்பட்டார்.

க்ளென் மாக்ஸ்வெல்லின் இந்த வேகமான உடனடி செயல்பாட்டை வீடியோ எடுத்த முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

ஐபிஎல் 2020 ஆரம்பிக்கற தேதி தெரிஞ்சாச்சு... ரசித்துக் கொண்டாட தயாராகுங்க மக்களே!ஐபிஎல் 2020 ஆரம்பிக்கற தேதி தெரிஞ்சாச்சு... ரசித்துக் கொண்டாட தயாராகுங்க மக்களே!

மெல்போர்ன் ஸ்டார்ஸ்-ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மோதல்

மெல்போர்ன் ஸ்டார்ஸ்-ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மோதல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் மோதிய போட்டி தாஸ்மானியாவின் லான்கெஸ்டனில் நடைபெற்றது.

தீயணைப்பு வீரராக மாறிய கேப்டன்

தீயணைப்பு வீரராக மாறிய கேப்டன்

இந்தப் போட்டிக்கு முன்னதாக மைதானத்தின் அருகில் இருந்த புதரில் தீப்பற்றியது. இதையடுத்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் க்ளென் மாக்ஸ்வெல் உடனடியாக செயல்பட்டு தீயணைப்பானைக் கொண்டு அந்த தீயை அணைக்க முற்பட்டார்.

தென்னாப்பிரிக்க வீரர் பதிவு

தென்னாப்பிரிக்க வீரர் பதிவு

தங்களது அணியின் கேப்டன் மாக்ஸ்வெல்லின் இந்த உடனடி செய்கையால் ஈர்க்கப்பட்ட முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இதை வீடியோவாக எடுத்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.

பிபிஎல் டிவிட்டரில் பதிவு

டேல் ஸ்டெயினின் இன்ஸ்டாகிராம் பதிவினை தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் பதிவிட்ட பிபிஎல், தங்களது போட்டிக்கு குறுக்கீடாக மாறவிருந்த புதர் தீயை அணைக்க மாக்ஸ்வெல் மேற்கொண்ட செயல் என்ற கேப்ஷனையும் போட்டுள்ளது.

போட்டியில் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ்

போட்டியில் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ்

இந்த போட்டியில் மழையின் குறுக்கீடு காரணமாக ரன்கள் அடிப்படையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மெல்போர்ன் ஸ்டார்ஸ் இரண்டாவது இடத்திற்கும், தோல்வி காரணமாக ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் 5வது இடத்திற்கும் தள்ளப்பட்டது.

Story first published: Tuesday, December 31, 2019, 12:23 [IST]
Other articles published on Dec 31, 2019
English summary
Glenn Maxwell turned firefighter to stop the Bushfire from spreading
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X