Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறுத்தை மாதிரி வேட்டையாடுறார்.. உலகத்திலேயே இவர் தான் பெஸ்ட்.. இந்திய வீரருக்கு குவியும் பாராட்டு!

Recommended Video

Dale Steyn and Gavaskar praises Shami | முகமது ஷமிக்கு குவியும் பாராட்டுக்கள்

மும்பை : சர்வதேச அளவில் கிரிக்கெட்டின் சிறந்த பௌலர்களில் ஒருவராக இந்தியாவின் முகமது ஷமி விளங்கி வருவதாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேய்ன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் முகமது ஷமி பல்வேறு ஆட்டங்களில் இதுவரை 68 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் இந்த பட்டியலில் 83 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

கடந்த 2013ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக முதல்முறையாக தனது ஆட்டத்தை துவங்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, அதிலிருந்து பௌலிங்கில் தன்னுடைய வேகத்தை குறைத்துக் கொள்ளவே இல்லை.

 முகமது ஷமி சிறப்பான ஆட்டம்

முகமது ஷமி சிறப்பான ஆட்டம்

சர்வதேச அளவில் தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் முகமது ஷமி, சிறந்து விளங்குவதாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேய்ன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து சாதனை

தொடர்ந்து சாதனை

கடந்த 2013ல் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் முதன்முதலாக தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டை துவக்கிய முகமது ஷமி, அதுமுதல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வேகப்பந்து வீச்சு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது.

 பாட் கமின்சுக்கு அடுத்த இடம்

பாட் கமின்சுக்கு அடுத்த இடம்

இந்த சீசனில் இதுவரை பல்வேறு போட்டிகளில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் 83 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ள நிலையில், அவரை ஷமி தொடர்ந்து வருகிறார்.

 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

இந்தூரில் நடைபெற்றுவரும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணி 213 ரன்களில் சுருள காரணமாக விளங்கினார் ஷமி.

 ஷமி சிறப்பு - டேல் மகிழ்ச்சி

ஷமி சிறப்பு - டேல் மகிழ்ச்சி

இதனிடையே டிவிட்டர் மூலம் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேய்ன், தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் சிறப்பானவர் யார் என்ற கேள்விக்கு முகமது ஷமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

 கவாஸ்கர் மகிழ்ச்சி

கவாஸ்கர் மகிழ்ச்சி

இதேபோல ஷமியின் வேகப்பந்து வீச்சு குறித்து முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கரும் பெருமிதம் தெரிவித்துள்ளார். எப்போதும் இரையை வேட்டையாட தயாராக உள்ள சிறுத்தையை போல முகமது ஷமியின் ஆட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 எதிரணியினருக்கு சவால்

எதிரணியினருக்கு சவால்

அவர் தன்னுடைய கைகளில் பந்தை சுழற்றும்போது, தன்னுடைய மணிக்கட்டை சிறப்பான நிலையில் வைத்துள்ளதாக கவாஸ்கர் மேலும் கூறியுள்ளார். மேலும் தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு, பந்தை சுழற்றி வீசுவதன் மூலம் அவர் எதிரணிக்கு சவாலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, November 17, 2019, 11:22 [IST]
Other articles published on Nov 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+