
டாஸ் வென்ற பெங்களூரு
டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய அதிரடி வீரர் கெய்ல் 27 ரன்களும், கோலி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கலக்கிய டி வில்லியர்ஸ், மன்தீப் ஜோடி
தொடக்க வீரர்கள் ஏமாற்றினாலும், அடுத்து வந்த டிவில்லியர்ஸ், மன்தீப்சிங் ஆகியோர் அபாரமாக விளையாடி எதிரணியின் பந்துகளை சிதறடித்தனர்.

3 வது விக்கெட்டுக்கு 113 ரன்கள்
மூன்றாவது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ், மன்தீப்சிங் ஜோடி 113 ரன்களை சேர்த்த நிலையில், 66 ரன்கள் எடுத்த டிவில்லியர்ஸ் ரன் அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

180 ரன்கள் குவிப்பு
20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களைக் குவித்தது. மன்தீப் சிங் 54 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் வீரர் குல்கர்னி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒரு ஓவருக்கு 9 ரன்கள் தேவை
ஓவருக்கு 9 ரன்கள் என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான வாட்சன் 10 ரன்களுக்கும், சாம்சன் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தனர்.

அதிகபட்சமே 42 தான்
கேப்டன் ஸ்மித், கருண் நாயர் ஆகியோர் தலா 12 ரன்கள் எடுத்து வெளியேறினர். தொடக்க வீரரான ரஹானே மட்டும் 13 ஓவர்கள் வரை களத்தில் நின்று, அதிகபட்சமாக 42 ரன்கள் சேர்த்தார்.

109 ல் சுருண்ட ராஜஸ்தான்
19 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ராஜஸ்தான் அணி, இறுதியில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்களூர் வீரர்களான அரவிந்த், ஹர்ஷல் பட்டேல், வெய்ஸ், சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடரிலிருந்து ராஜஸ்தான் வெளியேற்றம்
இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி, ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியது.

இறுதிக்கு நுழையப் போவது யார்?
தற்போது வெற்றி பெற்றுள்ள பெங்களூர் அணி , முதல் பிளேஆப் சுற்றில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சென்னை அணியை நாளை இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சந்திக்கிறது.


Click it and Unblock the Notifications











