இன்னும் 2 நாட்கள்தான்.. தலயின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் பிசிசிஐ.. அதிர வைக்கும் திட்டம்!
லண்டன்: இன்னும் இரண்டு நாட்களில் இந்திய அணியின் முன்னணி வீரர் தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியானதில் இருந்தே, தோனி குறித்த கேள்விகள் எழுந்து வருகிறது. தோனி எப்போது ஓய்வு பெறுவார். தோனியின் கடைசி போட்டி எது என்ற கேள்வி எழுந்து வருகிறது.
ஆனால் தோனி இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தோனியின் ஓய்வு குறித்த அதிகாரப்பூர்வமாக அவர் தரப்பில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.

என்ன
இந்த நிலையில்தான் இந்திய அணி அடுத்த மாதம் மேற்கு இந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் தொடர் விளையாட செல்கிறது. டி20, டெஸ்ட், ஒருநாள் என்று நீண்ட கிரிக்கெட் தொடரை விளையாட இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்கிறது. இந்திய அணியில் யாரெல்லாம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கடும் எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

மீட்டிங் என்ன
இதையடுத்து நாளை மறுநாள் இது தொடர்பாக பிசிசிஐ தேர்வுக்குழு மீட்டிங் நடக்க உள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்லும் 15 பேர் கொண்ட அணியை இந்திய தேர்வுக்குழு நாளை மறுநாள் மாலை அறிவிக்க உள்ளது. யாரை அணியில் எடுக்க போகிறார், யாரை நீக்க போகிறார்கள் என்று இதில் தெரிய வரும்.

தோனியின் எதிர்காலம்
தோனியின் எதிர்காலமே இதில்தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆம், தோனி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படுவாரா என்பதை பொறுத்துதான் அவரின் எதிர்காலம் உள்ளது என்கிறார்கள். தோனி ஒருவேளை மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தேர்வாகவில்லை என்றால், அவர் இனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகம்தான் என்கிறார்கள்.

ஏற்கனவே என்ன
ஏற்கனவே தோனி இனி இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவது சந்தேகம்தான். அவர் இனி நேரடி தேர்வாக அணிக்குள் எப்போதும் இருக்க மாட்டார் என்று பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில்தான் பிசிசிஐ மீட்டிங் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதில் தோனியின் எதிர்காலம் தெரிவித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications