Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரைசதம் மட்டுமே அடிச்சா எப்படி கேப்டன்... ரசிகர்கள் சதத்திற்காக வெயிட்டிங்.. பார்த்து செய்ங்க!

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்றைய தினம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா முதலில் பேட்டிங் செய்துவரும் நிலையில், விராட் கோலி 79 பந்துகளில் 66 ரன்களை எடுத்து ஆதில் ரஷீல் பந்தில் அவுட்டானார்.

கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் அவர் 7 அரைசதங்களை குவித்துள்ள நிலையில், சதமடிக்கும் அவரது மற்றும் அவரது ரசிகர்களின் கனவு பொய்த்து காணப்படுகிறது.

2வது ஒருநாள் போட்டி

2வது ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேசன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து தற்போது இந்திய அணி ஆடி வருகிறது.

அடுத்தடுத்த பார்ட்னர்ஷிப்

அடுத்தடுத்த பார்ட்னர்ஷிப்

இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கிய நிலையில் 4 ரன்களுக்கு ஷிகர் அவுட்டானார். இதையடுத்து களறமிறங்கிய கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுலுடன் அடுத்தடுத்து கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினார்.

ராகுலுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்

ராகுலுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்

79 பந்துகளில் அவர் 66 ரன்களை எடுத்துள்ளார். மேலும் கேஎல் ராகுலுடன் இணைந்து 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அவர் அடிக்கும் 4வது அரைசதம் இதுவாகும். 37 ரன்களில் இருந்து அணியின் ஸ்கோரை இருவரும் சேர்ந்து 137 ரன்களாக உயர்த்தினர்.

62வது அரைசதம்

62வது அரைசதம்

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 62வது அரைசதம் இதுவாகும் . மேலும் கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி 7 அரைசதங்களை அடித்துள்ளார். ஆயினும் சதமடிக்கும் அவரது கனவு மற்றும் அவரது ரசிகர்களின் கனவு மட்டும் தள்ளிக் கொண்டே போகிறது.

Story first published: Friday, March 26, 2021, 17:35 [IST]
Other articles published on Mar 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+