Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் சினிமான்னா.. அதில் கவாஸ்கர்தான் "ஷோலே".. ஷேவாக் வைத்த "ஷொட்டு"

டெல்லி: கவாஸ்கர் ஒரு மாபெரும் சாதனையாளர். கிரிக்கெட்டை சினிமாவாக கருதினால் அதில் கவாஸ்கர்தான் ஷோலே என்று கூறலாம். அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் மிகப் பெரிய சாதனை படைத்தர் கவாஸ்கர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் வீரேந்திர ஷேவாக்.

இன்று கவாஸ்கரின் 66வது பிறந்த நாள். இதையொட்டித்தான் இப்படி புகழ்ந்து தள்ளியுள்ளார் ஷேவாக். ஷேவாக் தவிர மேலும் பலரும் கவாஸ்கருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.

ஷேவாக் தனது ஸ்டைலில் கவாஸ்கரை புகழ்ந்துள்ளார். ஷேவாக்கின் வாழ்த்து...

ஹெல்மட் போடாமலேயே

ஹெல்மட் போடாமலேயே

அன்று ஹெல்மட் போடாமலேயே அத்தனை பேட்டிங் சாதனைகளைப் படைத்தவர் கவாஸ்கர். இன்றுள்ள வீரர்களால் எத்தனை பாதுகாப்பு சாதனங்களைக் கொடுத்து பேட் செய்யச் சொன்னாலும் அதை செய்வது கடினமாகும்.

கவாஸ்கர்தான் ஷோலே

கவாஸ்கர்தான் ஷோலே

கிரிக்கெட்டை சினிமாவாக கருதினால் அதில் கவாஸ்கர்தான் ஷோலே. அப்படிப்பட்ட சாLனையாளர் கவாஸ்கர். உலகின் மிக் சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவரான கவாஸ்கருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ஷேவாக்.

10,000

10,000

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த முதல் வீரர் கவாஸ்கர்தான். அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்களை எடுத்த முதல்வரும் கவாஸ்கர்தான். அவரது காலத்தில் கவாஸ்கர் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தார்.

சாதனைகள்

சாதனைகள்

அறிமுகமான முதல் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஒரே வீரராக இது நாள் வரை கவாஸ்கர்தான் விளங்கி வருகிறார். அதேபோல மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதம் போட்ட வீரர் என்ற சாதனையும் இன்னும் கவாஸ்கரிடம்தான் உள்ளது. மேலும் ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் இரட்டை சதம் போட்ட ஒரே வீரரும் கவாஸ்கர்தான்.

71 முதல் 87 வரை

71 முதல் 87 வரை

1971ம் ஆண்டு வரை 1987ம் ஆண்டு வரை கவாஸ்கர் இந்திய அணிக்காக ஆடியுள்ளார். மொத்தம் 125 டெஸ்ட் போட்டிகளும், 108 ஒரு நாள் போட்டிகளிலும் அவர் ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் 10,122 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 51.12 ஆகும்.

ஒரு நாள் போட்டிகளில் சுமார்தான்

ஒரு நாள் போட்டிகளில் சுமார்தான்

108 ஒரு நாள் போட்டிகலில் ஆடியுள்ள கவாஸ்கர் 3092 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரே ஒரு சதம் மட்டும்தான் அடித்துள்ளார். அவரது சராசரியும் 35.13 மட்டுமே.

Story first published: Sunday, July 10, 2016, 16:04 [IST]
Other articles published on Jul 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+