Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ காட்.. கிரிக்கெட் வீரர்களுக்கு என்னாச்சு.. டோணி போல கோஹ்லியும் முடி வெட்டிட்டாரு.....!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திடீரென என்னாச்சு என்று தெரியவில்லை. வரிசையாக ஆளாளுக்கு ஹேர்ஸ்டைலை மாற்ற ஆரம்பித்துள்ளனர்.

கேப்டன் டோணியைத் தொடர்ந்து தற்போது விராத் கோஹ்லியும் தனது தலைமுடியைக் குதறி புது ஹேர்ஸ்டைலுடன் உலவ ஆரம்பித்துள்ளார்.

இதுவும் கிட்டத்தட்ட டோணியின் மோஹாக் ஹேர்ஸ்டைல் போலத்தான் உள்ளது. ஆனால் புருவத்தையும் சேர்த்து வெட்டி கோடு கிழித்து வித்தியாசப்படுத்தியுள்ளார் கோஹ்லி.

மொட்டை பாதி.. நடுவே தலைமுடி மீதி...

மொட்டை பாதி.. நடுவே தலைமுடி மீதி...

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தற்போது சாம்பியன்ஸ் லீக் தொடரில் பிசியாக உள்ள டோணி தனது ஹேர்ஸ்டைலை படு வித்தியாசமாக மாற்றி நூதனமாக தலை காட்டியபோது பலரும் அசந்து போயினர்.

நடுவே முடி... சுற்றிலும் புல்வெளி...!

நடுவே முடி... சுற்றிலும் புல்வெளி...!

அதாவது தலையின் நடுவே மட்டும் முடிவைத்துக் கொண்டு சுற்றிலும் மொட்டை அடித்தாற் போல வினோதமான தலையுடன் காட்சி தருகிறார் டோணி.

நாங்களும் வெட்டுவோம்ல.. கோஹ்லியும் 'கட்'

நாங்களும் வெட்டுவோம்ல.. கோஹ்லியும் 'கட்'

இந்த நிலையில் தற்போது விராத் கோஹ்லியும் தலைமுடியை மாற்றியுள்ளார்.

டோணி மாதிரியே ... ஆனால் புருவத்தையும் சேர்த்து

டோணி மாதிரியே ... ஆனால் புருவத்தையும் சேர்த்து

டோணி மாதிரியே இவரும் மோஹாக் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். ஆனால் அத்தோடு நில்லாமல் தலையின் இரு பக்கமும் கோடு கிழித்தாற் போல வாய்க்கால் வெட்டியுள்ளார். கூடவே புருவத்திலும் கோடு கிழித்தாற் போல வெட்டியுள்ளார்.

ஏன் ராசா இப்படி...!

ஏன் ராசா இப்படி...!

ஏன் இந்தக் கோலம் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுதான் எனது புதிய ஹேர்ஸ்டைல். 2 நாளைக்கு முன்னாடிதான் மாத்தினேன். ஸ்போர்ட் பிராண்ட் விளம்பரத்திற்காக இந்த ஸ்டைலுக்கு மாறினேன்... நன்றாகத்தானே இருக்கிறது என்று பதிலளித்தார் கோஹ்லி.

டோணி சொல்லும் விளக்கம் என்னன்னா...!

டோணி சொல்லும் விளக்கம் என்னன்னா...!

இதற்கிடையே, தனது புது ஹேர்ஸ்டைல் குறித்து பலரும் தனது தலையைப் பார்த்து விமர்சிப்பது குறித்து பதிலளித்துள்ள டோணி, இப்படி வெட்ட வேண்டும் என்பது எனது முடிவல்ல. எனது ஹேர்ஸ்டைலிஸ்ட் முன்பு போய் உட்கார்ந்தபோது, வித்தியாசமான ஸ்டைலை கொடுக்கப் போவதாக கூறினார். அவர் வெட்டி முடிக்கும் வரை நான் கண்ணாடியைக் கூட பார்க்கவில்லை. எல்லாம் முடிந்த பிறகுதான் தலையைப் பார்த்தேன். அது இப்படி இருக்கிறது என்றார் பச்சப் புள்ளையாட்டம்.

ஒருபக்கம் மீசை ... இன்னொரு பக்கம் அரைவட்டை...!

ஒருபக்கம் மீசை ... இன்னொரு பக்கம் அரைவட்டை...!

இந்திய கிரிக்கெட் அணியில் இப்போது முடிக்கு கிரகம் சரியில்லை போல... ஷிகர் தவன் முறுக்கு மீசையுடன் சிறுத்தை கார்த்தி போல எப்பப் பார்த்தாலும் மீசையை முறுக்கி விட்டபடி இருக்கிறார். அவரைப் பார்த்து ரவீந்திர ஜடேஜாவும் மீசையை முறுக்கி விட்டு வருகிறார். இப்ப டோணியும், கோஹ்லியும் தலையில் கை வைத்துள்ளனர்.

அடுத்து யார் என்ன செய்யப் போறாங்களோ... ஏதாச்சும் செய்வாங்க.. நாம வேடிக்கை பார்ப்போம்...!

Story first published: Friday, September 27, 2013, 16:48 [IST]
Other articles published on Sep 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+