நாஜிக்கள் குறித்து யாருமே பேச முடியாது.. இளம் ஐபிஎல் வீரர் பரபரப்பு டிவிட்.. சர்ச்சைக்கு பின் டெலிட்
சென்னை: விவசாயிகள் போராட்டம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் கூறிய கருத்துக்கு இளம் ஐபிஎல் வீரர் சந்தீப் சர்மா கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்தது சர்ச்சையாகி உள்ளது. இந்திய விவகாரத்தில் இவர்கள் எல்லாம் தலையிட கூடாது என்று இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கிரிக்கெட் வீரர்கள் கோலி, சச்சின், ரோஹித் போன்றவர்கள் விவசாயிகள் போராட்டத்தில் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களின் இந்த கருத்தை இளம் வீரர் சந்தீப் சர்மா விமர்சித்துள்ளார்.

சந்தீப் சர்மா
ரிஹானா விவசாயிகள் குறித்து பேசியதற்காக அவருக்கு எதிராக பல பிரபலங்கள், வெளியுறவுத்துறை உட்பட பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த லாஜிக்கப்படி பார்த்தால் யாருமே ஜெர்மனி பற்றி பேச முடியாது.

கருத்து
யூதர்களை நாஜிக்கள் கொன்றது குறித்து ஜெர்மனிக்கு வெளியே யாருமே பேச முடியாது. பாகிஸ்தானுக்கு வெளியே இருக்கும் யாரும் பாகிஸ்தானில் இந்துக்கள், அஹமதியர்கள், சீக்கியர்கள் கொல்லப்படுவது குறித்து பேச முடியாது. அதேபோல் இந்தியாவிற்கு வெளியே இருக்கும் யாரும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவது குறித்தும்.
யூதர்கள்
1984ல் நடந்த சீக்கிய படுகொலை குறித்தும் பேச முடியாது. அமெரிக்காவில் வெளியே இருக்கும் யாரும் அமெரிக்காவில் நடக்கும் நிறவெறி தாக்குதல்கள் குறித்தும் பேச முடியாது. உங்கள் லாஜிக் படி பார்த்தால் யாருமே மற்றவர்களை பற்றி பேச முடியாது.

தனிப்பட்ட விஷயம்
எல்லாமே அவரவர்களுக்கு தனிப்பட்ட விஷயம்தான் என்று சந்தீப் சர்மா டிவிட் செய்துள்ளார். இந்த டிவிட் பெரிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து சந்தீப் சர்மா உடனே தான் செய்த டிவிட்டை சில நிமிடங்களில் டெலிட் செய்தார்.

சர்மா பதில்
சந்தீப் சர்மா ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் பவுலர் ஆவார். ஹைதராபாத் அணியில் ஆடி வரும் இவர் அந்த அணியின் முக்கிய பவுலர். இந்திய கிரிக்கெட் பலரும் ஒரே மாதிரி கருத்து கூறி உள்ள நிலையில் இவர் மட்டும் மாற்று கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications