Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி… டாஸ் வென்ற கொல்கொத்தா பந்துவீச்சு

கொல்கத்தா:ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கொத்தா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி நடைபெறுகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், புவனேஷ் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் களம் இறங்கியுள்ளன.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பவுலிங்கை தேர்ந்து எடுத்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:இந்த மைதானத்தில் சிறந்த ஆட்டங்களை நாங்கள் ஆடியிருக்கிறோம்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

அருமையாக பந்துவீசி எதிரணியை திணறடித்து ரன்களை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளோம். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இருக்கிறோம் என்றார்.

வில்லியம்ஸ் இல்லை

வில்லியம்ஸ் இல்லை

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் புவனேஷ்குமார் கூறியதாவது:உண்மையில் இது மிக சந்தோஷமான தருணம். அணிக்கு என்னை கேப்டனாக தேர்ந்தெடுத்து உள்ளனர். கேன் காயம் காரணமாக இடம்பெறவில்லை. டேவிட் வார்னர் அணிக்கு திரும்பி இருக்கிறார் என்றார்.

அணி வீரர்கள்

அணி வீரர்கள்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விவரம்:டேவிட் வார்னர், ஜானி பேர் ஸ்டோவ், மணீஷ் பாண்டே, தீபக் கூடா, ஷாகிப் அல் ஹாசன், விஜய் சங்கர், யூசுப் பதான், ரசித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல்.

வீரர்கள் யார்? யார்?

வீரர்கள் யார்? யார்?

கொல்கத்தா அணி விவரம்:கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, சுப்மன் கில், நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக், ஆண்டிரு ரசல், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், பெர்குசான், கிருஷ்ணா.

Story first published: Sunday, March 24, 2019, 17:00 [IST]
Other articles published on Mar 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+