தம்பி டீ இன்னும் வரல..! போ... போயி பந்தை போடு..! அப்பீல் செய்த பிராவோவுக்கு தல தோனி ரியாக்சன்
Recommended Video

சென்னை:டெல்லி அணியுடனான போட்டியில் என்னப்பா என்கிற ரீதியில் பிராவோவை பார்த்து தல தோனி புருவத்தை உயர்த்தி, தலையை லேசாக அசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது. 2வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
20 ஓவர் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் அடித்தது.148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை தொடக்க வீரர் வாட்சன் அதிரடியாக ஆடி ரன்ரேட்டை உயர்த்தினார்.

ரன்ரேட் அதிகரிப்பு
11வது ஓவரிலேயே அந்த அணி 100 ரன்களை எட்டியது. ஆனால்... கேதர் ஜாதவும் தோனியும் நிதானமாக ஆட, ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்றது. ஒரு வழியாக கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற்றது.

சூப்பரான சுவாரசியம்
தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டியின் போதும் ஏதேனும் ஒரு சுவாரசியமான சம்பவங்கள் நடப்பது உண்டு.

நடந்தது என்ன?
அந்த போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. பிராவோ வீசிய 16வது ஓவரில் தான் அது நிகழ்ந்தது. அந்த ஓவரில் 5வது பந்து, டெல்லி கேபிடள்ஸ் வீரர் கீமோ பாலின் பேடில் பட்டது.

அப்பீல் செய்த பிராவோ
உடனே... அது அவுட் தான் என்று ஆணித்தரமாக அவர் அப்பீல் செய்தார். ஆனால் அம்பயரோ அது அவுட் கிடையாது என்று மறுத்துவிட்டார். அத்தனைக்கும் அந்த பந்து ஆப் ஸ்டம்பிற்கு மேலே சென்றது.
தோனியின் பார்வை
அம்பயர் மறுத்துவிட, உடனே பிராவோ, தல தோனியை பார்த்தார். என்ன தல... ரிவியூ செய்யலாமா என்பது போல அந்த பார்வை இருந்தது. நம்ம... தோனி தான் ரிவியூ எக்ஸ்பர்ட் ஆச்சே... உடனே இரு புருவங்களையும் உயர்த்தி, என்னப்பா என்கிற ரீதியில் ரியாக்ஷன் காட்டினார்.

வைரல் வீடியோ
அந்த பந்து ஆப் ஸ்டம்பிற்கு மேலே சென்றுவிடும் என்பதை நன்கறிந்ததால் தோனி அந்த ரியாக்ஷனை காட்டினார். அதை பார்த்த பிராவோவோ சிரித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கணக்கில்லாமல் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications